பஞ்சத்தில் நான்.. மஞ்சத்தில் மான்..
கொஞ்சல்கள் வீண்.. அள்ளித் தின்னட்டா..
உடையோ உனது.. இடையோ எனது..
இதயம் உனது.. மார்போ எனது..
உனது எனது.. உனது எனது..
உனது எனது.. உனது எனது...
வாராய் வாராய் நீ வாராய்..
நீ போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்..🎶🎶😍😍-
🍓Engineer
🍓Birthday: April 12, International Day of Human Space Flight
❣️My ... read more
பகலில் எரியும் இந்த மெழுகாய்
அருகில் இருந்தும் என் காதலை
சற்றும் உணராமல் போனாயடி உயிரே..
உன்னோடு நானும், என்னோடு நீயும்
என்றென்றும் இணைந்திருப்போம்
என்ற எண்ணத்தைக் குற்றுயிர் ஆக்கியே !-
இத(ழ்)நீர் பருகி
தலைப்பூச் செய்திகள்
சுவாசித்த பிறகே
எந்தன் வைகறையும்
விடிகிறது என்றேன்..
பூத்தாள் புன்னகையில்..
மயக்கும் காதல் வாசத்தில் !-
குளிர் பனியில் இதழ்கள் வெடிக்கிறது என்றாள்..
கன்னக் கதுப்புகளில் வெண்ணெய் தான் திரண்டிருக்கிறதே..
கொஞ்சமாய் கொஞ்சம் சேகரித்து தடவி விடவா என்றேன்..
நளினமாய் மலர்ந்தாள் அழகாய் நாணத்தில் நாயகியும் !-
காலடித்தடமே தடயமாய்.
புலம் பெயர்ந்தது மணல் துகள்கள்..
காதலின் கட்டியம் கரையில் !-
காதல் காதல் காதல்..
என் கண்ணில் மின்னல் மோதல்..
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்..
நீ பார்க்கும் பார்வையில்..
மனம் காதல் ஃபீவரில்..
நான் கொஞ்சம் அணைக்க..
என் கன்னம் சிவக்க..🎶🎶😍😍-
மனம் கொள்ளை கொள்ள
மேகத்தூளியில் குறும்பாய் மெதுவாய்
எட்டிப் பார்க்கும் குழந்தையோ இவன் !-
நீர்த்திடா வண்ணங்களில்
நிழலும் வண்ணமாக..
தீர்த்திடா தாபங்களில்
தென்றலும் தூபம் போட..
உணர்கிறேனடி உற்றவளே
உந்தன் விழிமொழிகளில்..
சொல்லகராதியில் சொல்லிடா
புதுப்புது அர்த்தங்களை !-
கனவெல்லாம் இனி மெய்ப்படுமே..
அழகினைப் பாட மொழி கூட என் வசமாகுமே..
வானம் வசப்படுமே..
கவிதை பார்வையை படித்தால்
தமிழ் இலக்கியம் வசப்படுமே..
செவியில் புன்னகை விழுந்தால்
இசை நொடியினில் வசப்படுமே..
வான் போலே நீளாதே..
தீண்டாமல் தாளாதே..
ஆஹா.. நம் விரல் படுமே.. பட்டால்
ஆகாயம் வசப்படுமே..
விழியில் நீ விழும் வரையில்
நான் நிறங்களை இரசிக்கவில்லை..
மனதில் நீ வரும் வரையில்
நான் இரவினில் விழித்ததில்லை..
காற்றாக வாழ்ந்தேனே..
கண் கூண்டில் அடைத்தாயே..
எல்லாம் என் வசப்படுமே..
எந்தன் நெஞ்சோ உன் வசப்படுமே..
What a lovely song🎶🎶🥳🥳-
Einstein உந்தன் Eye ஐ பார்த்திருந்தால்
ஐயமற உரைத்திருக்க மாட்டானோ,
ஒளியின் வேகத்தை மிஞ்சியது
ஏதும் இல்லையென்று..
உந்தன் விழி வீச்சின் வேகம்
கண்டிருக்கவில்லையல்லவா அவனும் !-