Venkat Venky   (கிறுக்கன்..!!)
105 Followers · 117 Following

read more
Joined 17 September 2019


read more
Joined 17 September 2019
9 JUL AT 19:31

..எது வந்தாலும் "கடவுள்" காப்பாற்றுவார் என்கிறார்கள்..

ஆம்..
கவலை வேண்டாம்..!!
கண்டிப்பாக காப்பாற்றுவார்..!!
சாதி,மத,சமயங்களினால் உண்டான பேதத்தை....காலங்கள் பல கடந்தும்..!!

-


5 JUL AT 13:33

..தேங்காய் ரொம்ப விலையா இருக்கே..!!
கொஞ்சம் குறைச்சிக்க கூடாதா..சாமிக்கு தானே.. என்றான் பக்தன்..
"தெரியாதவர்களுக்கு விலை குறைக்கிறதில்லைங்க" என்றார்
கடைக்காரர் பொதுவாக..!!

-


20 JUN AT 13:02

..சக மனிதர்கள் கோவிலுக்குள் நுழைவதால் தான் அதன் புனிதம் கெட்டுவிடும் என்றால்..!!
அது புனிதமும் இல்லை..
கெட்டு போவதில் எந்த குறையும் இல்லை..!!

-


25 MAY AT 11:37

"தேநீர் குடிப்பதை கொஞ்சம் நிறுத்தி தான் தொலையேன்" என்றார்கள் பலர்..!!🤗🤗

பல நேரங்களில் மனிதர்களை விடவும் என் சுக துக்கங்களை அதிகமாக பகிர்ந்தது என் தேநீருடன் மட்டும் தான் என்பது அவர்களுக்கு தெரிய நியாயமில்லை தான்..!!🥰

-


24 APR AT 18:52

இவ்வளவு
சாதிய கலவரங்களையும்..
மத கலவரங்களையும்.
ஆணவ கொலைகளையும்..
வன்புணர்வு வக்கிரங்களையும்..
"கடவுள் காண்பது இல்லையா??"

என கேட்பவர்களை கண்டால்
சிரிக்க தான் தோன்றுகிறது..!!

தன்னருகில் நடக்கும் ஆலய உண்டியல் திருட்டையே கடவுள் கண்டு கொள்வதில்லையே..!! மற்றதை எங்கே சொல்வது??

-


9 FEB AT 8:23

மேலத் தெருவில் நீயெல்லாம் வரக்கூடாதென அவமானப்படுத்தப்படுகிறான் தலைமுறைகள் கடந்தும்..!!
எச்சத்தை அங்கே விட்டு சென்றது காக்கை தன் பங்குங்கு..!!

-


8 FEB AT 15:58

எங்கோ ஊர் பெயர் அறியா தெருவில் நாம் நடக்கையில்..
தடுக்கி விழ நேரும் போது
"பாத்து போ கண்ணு" என
நொடியில் மெலிதாய் கேட்கும்
குரல்..!!
பிரபஞ்ச பேரன்புக்கான ஊற்றின்
பெருந்துளியை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்??❤️

-


20 JAN AT 16:50

மனிதர்கள் மட்டுமே காதல் கொள்வார்கள் என்றே எண்ணியிருந்தேன்..!!

நாய்க்குட்டிகளை காணும் வரையில்..!!

-


19 JAN AT 23:41

என்னுடன் இருக்கும் போது நீ..
என்றுமே நீயாக இருக்கிறாய் என நம்புகிறேன்..!!
பிறரிடம் இருக்கும் நானாக ஏனோ உன்னிடம் நான் இல்லாமல் இருப்பதாலோ..!!

-


19 JAN AT 23:38

மிகுந்த கோபமாய் தான் இருந்தேன்..!!
" என் மேல் ஏதும் கோபமா?? "
என நீ கேட்கும் நொடி வரை..!!😊

-


Fetching Venkat Venky Quotes