என் வலியை
கடன் வாங்கி
சுமக்குமவன்
ஒருநாளும் தந்ததில்லை
என்னிடம்
அவன் வலியை...-
veni kutty
(Ennavanin avanaval)
140 Followers · 56 Following
Joined 24 February 2019
26 SEP 2021 AT 17:56
21 AUG 2021 AT 21:38
எழுதி முடிக்கும் முன்பே
கரைந்து போன
வார்த்தைகளில்
ஒளிந்துள்ளது...
சில வலிகளின்
வரிகள்...-
26 JUN 2021 AT 18:49
உண்மை எடுத்துரைப்பில்
சில பொய்கள்
இடைசொருகும்போது
உண்மை
மேலும்
மெருகூட்டப்படுகிறது...-
21 APR 2021 AT 18:51
இறுக்கி புடிச்ச
அவன் வாசம்
காத்துல கரைஞ்சி
கண்ணீரா வெளிவந்து
காத்துக்கூட சண்டபோட்டு
கடைசியா வத்திபோது!...
ஆனா
தேக்கி வெச்ச
அவன்
நெனப்பு மட்டும்
வத்த வழி பண்ணாலும்
அடம்புடிச்சி வத்தாம
ஊத்தா சொரக்குது!...-
20 APR 2021 AT 19:33
இவளறியா
குட்டிச்சேட்டைகள்
வலித்தெரியா
செல்லக்கடிகள்
கண்திறக்கா
சில நொடிகள்
கண்ணுறங்கா
பலபொழுதுகள்
கடக்கவியலா
அவன் நினைவுகள்
கடந்து சென்றதே
காலக்கட்டாயத்தில்!...
-
14 MAR 2021 AT 16:59
கொத்தி குதறும்
நின் நினைவுகளின்
நீட்சி
கால மருந்திட்டும்
கண்டுகொள்ளாமல்
கல்லறை வரை
ஆறா ரணமாகும்
இடையிலும்
கள்வனவன்
மீட்டெடுக்காதபோது!..
-