உன்றன்
காந்தப் புன்னகை
கவர்ந்திழுத்த துருவோ
அந்த முகப்பரு?-
Amateur Writer@Night
I.G - @veeru_musings
ஒடியாத
வேய்ங்குருத்துகளாய்
வளைகின்றன!
முடியாத பல நினைவுகள்
வடியாத பால் நிலவாய்
விடாமல் துரத்துகின்றன!-
மாராப்புச் சேலையைத்
தோளோடு மாட்டி
வைத்திருக்கும் ஊக்காய்.,
கூடல் வேளையில்
எனை உன்னோடு
மாட்டி வைத்துவிடு!-
பிடரியில் இறக்கு - உன்
முத்தக் கோடரியை!
விடிய விடிய
இச் இச்சென்ற வெட்டுகளால்
துடிதுடித்துக் கிடக்கட்டும் இப்பசலையுடல்!-
நீ அனுப்பும்
மின்முத்தங்களின்
கதகதப்பு போதும்
பசலையின் குளிருக்கு!-
நீ வருகையில் மட்டும்
நிலாவை மேகங்கள் ஒளித்து
வைத்துக் கொள்கின்றன - என்று
நீ கோபம் கொள்வதில் நியாயமல்ல சகி!
மாடியேறி வரும் நிலாவைத் தரிசிக்கவே காத்திருக்கின்றன வான் மேகங்கள்!
நிலா அறிவதில்லை தானொரு நிலாவென்று!-
நீயில்லாத குறையை
நிவர்த்திசெய்ய பார்க்கிறது
கண்ணாடியில் நீ ஒட்டிய பொட்டு!-
வெறுமை நிறைந்த பொழுதுகளில்
உன்பெயரை எழுதி பூரிக்கின்றேன்!
ஒரு சொல்லில் கவிதையொன்றை
எழுதிவிட்டதாய்!-
சொல்லும் முன்னர் காதலை!
சொன்னதும் காதலியை!
பின்னர் கருவுற்றாளை!
பிறந்த குழந்தையை!
...,
சுமப்பது போன்றுதான்,
கவிதையைச் சுமப்பதும்!
யாவும்
சுகமான சுமைகள்!-