இருள் மூடிய
கார்மேகத்தினுள்
ஓரிரு நொடிகள்
ஒளி வீசும்
மின்னல்கள்
அவள் கண் இமைக்கும்
தருணங்கள்...-
அலைகடலென பொங்கும்
சினம் கொள்ளும் நேரத்தில்
அன்பெனும் போர்வை
அனைக்கும் என் வாழ்வை
மான்விழியாள் அழகில்
மயங்கினேன் அவள் பார்வையில்
மழையின் குளிரும்
அனலாய் மாறும்
அவள் மூச்சுக்காற்று
என் முகம் தொடும் வேளையில்
மனம் முழுதும்
சரணடையும்
என் காதருகே அவள்
காதல் உரைக்கும் தருணத்தில்-
Looking into the mirror
Gathering my thoughts
Reaching out to names
Of the people I've lost...
To the heartless monster
In the depths of my darkness
Waiting for the slightest tap
To wake up and shred hearts
With the recurring fear
Of driving people away
Making friend go stranger,
Throwing words away
In a moment of anger...
The Guilt killing me,
I look into the mirror
And say to myself
Stay closed and silent
For the rest of the day
Everyday-
இருளில் நிலவாய்
என்றும் நினைவில்
நெஞ்சம் அவளை
நினைத்திருக்க
மாலை நேரம் கடந்து
மறையும் நிழலாய் என்னை
மங்கை அவள்
மறந்து சென்றாலே
கண்மணியே...-
அன்போடு தலைகோதும்
நித்திரையின் விரல்களில் இருந்து
நீ வெறுப்போடு விலகி சென்றாலும்
அவள் கண்ணீரின் கீதம் கூட
கண் சொக்க வெய்க்கும்
அவள் காதல் அறிவாயடி
கண்மணி-
நிலவோடு இரவெல்லாம்
கண்விழித்து கதைகள் பேசிய
ஒவ்வொரு மணித்துளியும்
நினைவுகளாக நெஞ்சில் மலர
மலர்கள் முழுவதும்
எண்ணி பார்த்து
மனமோ கவிதைகள் வரைய
அவ்வரிகளில் உன்னோடு
இன்னும் ஓரிரவு
விழித்திருக்கிறேன்...
கண்மணியே....-
கனவாக தோன்றும்
நடமாடும் வாழ்வே
கவலைகளோடு
காலம் நகர
வாழ்வில் வலிகள் மறைய
மனதில் கவலைகள் மறக்க
காதல் போதுமென
என் கண்கள் திறந்தாய்
கண்மணியே...
-
When you lose hope,
Let them wreck you,
Let them hurt you,
Let them break your heart
And soul too
Everytime you pick up
The pieces and mend your soul
It builds something stronger
Makes it hard
To break again...-
Endless dark skies
Calling out to me
The third wheel,always left out,
The joker,they always forget,
The loser,they always ignore,
The loner,always left alone
Longing for the company
Of someone or something
I wait for the moon
To stay awake with me
I wait for the rain
To cry with me
Yet the heavens too
Reject this desperate fool...-
நேற்று இருவரும் இருந்த
இணைப்பின் இறுக்கம்
இரவோடு உன் தேன்மொழி
தோகையென வருடி,
வருத்தங்கள் மறைந்து
உறங்கிய கண்கள்
இன்று விடியும் இந்த இடைவெளி
ஆறா காயத்தில்
அனல் காற்றாய்,
வலி கொடுக்க,
கண்களில் கண்ணீர்கொண்டு
உறக்கமின்றி உருகும் இரவுகள்
தீராதோ...
கண்மணியே...-