ஏதார்த்தமாக கேட்ட ஒன்றை
நானே மறந்தபின்பும்
எதிர்பாரத நேரத்தில்
எனக்கு தந்திடும்
உறவு கிடைப்பது வரம்
ஆம் எனக்கு கிடைத்த வரம் என்னவன். 💞..
-
அவனும் அவனது இதயமும்
அங்கே என் நினைவு இல்லாமல்
சந்தோசமாக இருக்கையில்...
என் இதயமும் மட்டும்
அவன் அங்கு என்ன செய்கிறானோ என்று அவனை பற்றியே நினைத்து
எனக்கு துரோகம் செய்கிறது...
-
என் நெஞ்சுக்குள் இருக்கும் நீ
நான் தூங்கிடும்போது
என் தோள் மேல் சாய்ந்து கொள்கிறாய்...
விழித்திடும்போது என் இதயத்திற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறாய்...
-
அன்னம் ஊட்டி வளர்த்தவள் அம்மா
அறிவை ஊட்டி வளர்த்தவள் என் ஆசிரியர்
எழுதுக்கோல் பிடிக்க வைத்து
என் கையெழுத்தை மட்டுமல்ல
என் தலை எழுத்தையும் அழகாய் மாற்றினாய்
ஏதும் அறியா என்னை
எல்லாம் அறிய செய்தாய்
என் கனவுகளுக்கு ஊன்றுகோல் கொடுத்தாய்
என் உயிருக்கு உருவம் கொடுத்தது என் அன்னை
என் உருவத்திற்கு அடையாளம் கொடுத்தது நீ
எனக்கு கொடுத்த கல்வி மட்டுமே...
பெற்ற பிள்ளையைப்போல என்னையையும் உரிமையோடு
என் பிள்ளை என்று நீ அழைப்பாய்
உன்னோடு நான் இருக்கும்போது உன் அருமை தெரியவில்லை
இப்போதுதான் தெரிகிறது நீ எனக்கு கற்று கொடுத்தது பள்ளி பாடம் மட்டுமில்ல என் வாழ்க்கை பாடம் என்று....
-
வலிகளை நான் மட்டுமே சுமக்கிறேன்
மற்றவர்களின் சந்தோஷத்திற்காக
ஆனால் அவர்களோ
எனக்கு வலியை தந்து சந்தோசப்படுகிறார்கள்...-
தேவை இல்லாததை தேடி
தேடலில் மூழ்குவதால்
தேவையானது எது என்று தெரியாமல்
தொலைத்துவிடுகிறோம்
-
அன்று பேசு பேசு என்று நச்சரித்த உறவுகள்
இன்று பேசாதே என்று எச்சரித்து செல்கின்றன
மாறியது அவர்களா
மாறவேண்டியது நாமா என்று
தெரியவில்லை 😔😔
-
முடியாது என்ற சொல்லை
உன்னால் முடியும் வரை சொல்லாதே
தெரியாது என்ற சொல்லை
உன் தேடல் தொடரும்வரை சொல்லாதே
இல்லை என்ற சொல்லை
உனக்கு தேவை இருக்கும்வரை சொல்லாதே
-
மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்துகொண்டார்கள் என்று வருத்தப்படும் முன்பு
நாம் அவர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள்
-
கனவிழும் கற்பனையிலும்
உன்னோடு வாழ்ந்தேன்
நிஜத்தில் வாழ்த்திட ஆசை கொண்டேன்
உன்னிடம் சொல்லிய
என் விடை தெரியா கேள்விகளுக்கு
காத்துக்கிடந்தேன் உன்னை
நினைக்கும்போதெல்லாம்
சிறு புன்னகை நிறைந்த வலிகளோடு
கடக்க நினைக்கிறன் உன்னையும் உன் நினைவுகளையும்...
காலங்கள் கடந்தாலும்
என் காதலை
இன்னும் என் மனதில் சுமந்துக் கொண்டிருக்கிறேன்
சுகமான சுமையை போலவே...
-