நீ இல்லாத நொடிகளே எனக்கு இருளானதென்று!
பகலுக்கு புரியாது
உன் அருகாமையில் எனக்கு
பகலவனே தேவையில்லை என்று!-
அஸ்திரத்திற்காக வஸ்திரம் பறித்தவனுக்கு
வஸ்திரமே அஸ்திரமானது
சாஸ்திரத்தில்!-
எழுத்துக்கள் விரல்
வழியே வரும்
ஓவியங்கள் மட்டுமல்ல!
அருகலையால் மனதோடு
இணைந்த காவியங்கள்!!
வெளிவருவது அழகிய
வடிவங்கள் மட்டுமல்ல!
வலிகளை வடிவமைக்க
துடிக்கும் எண்ணங்கள்!!-
அருகில் இருக்கும் எம் விழியோடு அல்ல!
மண்ணுக்கும் மனதுக்கும் தொலைவில் இருக்கும் உமதோடு!
உருவமுள்ள மொழி அறியும் விழிகளுக்கு
உணர்வுள்ள மொழி என்று புரியுமோ?-
ஒளி அறியாமல்
ஒளிந்திருந்தேன்
ஒலிக்கும் நம்பிக்கையோடு..
ஒற்றை கயிற்றின் இடைவெளி
நம்மை பிரித்த போதும்
கருவறையில்!-
அன்பையும் அக்கறையையும்
அழகையும் அழுகையையும்
வலியும் வேதனையையும்
விம்மலையும் வீரத்தையும்
மறைத்தும் வெடிக்கிறது
மறுத்தால் உடைக்கப்படுகிறது!
-
Be an expert before you criticize
விமர்சிக்கும் முன் வேந்தனாய் இரு
-
விவசாயியின் வியர்வை துடைக்க
தன் கண்ணீரைக் கொண்டு துயரம் நீக்குதலே மேகத்தின் வழக்கம்-