வானமகள் மேனி எங்கும்
நீலம் பூக்க
தங்கப் பொன்னொளி வீசி
திலகமிடுகிறாள் பவுர்ணமியாள்-
சிங்கம், புலி போன்றவர்களின் கோபங்களையும்
நியாயங்களையும்
உண்மைகளையும்
குள்ளநரி போன்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது-
பார்த்த விழி பார்த்தபடி
பூத்த விழி பூத்தபடி
நீண்ட நெடுஞ்சாலையோரம்
இதயம் திறந்து நானும்
நெடிய நாட்களாய்-
நேசிப்பதற்கு எதற்கு நேரம் காலம்?
நேசிப்பிற்கு ஏது சாதி மதம்?
நேசத்திற்கு எல்லை யார் வகுத்தது?
நேசம் நேசம் நேசம் மட்டுமே
உலகை இயக்கும் காதல் மந்திரம்-
ஓய்வு நாள் வேளைகள்
ஆறு நாள் களைப்பையும்
போக்கிடும் ஓர் நாள்
ஆவலுடன் காத்திருப்பேன்
ஞாயிறே உன் விடியலுக்காய்-
பிறரை நினைத்து கண்ணீர் விடும் முன் ஒரு நிமிடம்
இந்த கண்ணீருக்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா?
பிறரை நினைத்து வருந்தும்
முன் ஒரு நிமிடம்
இந்த நிமிடத் துளிகளை அவர்களுக்காக செலவழிப்பாதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா?
Don't vest your time for useless people-
விலை கொடுத்து வாங்க முடியாத
பல அரிய பொக்கிஷங்கள்
உலகில் இன்னும் பரந்திருக்கின்றன
அவை........
ஒழுக்கம், அன்பு, பிறர் சினேகம், மன்னிப்பு, அறிவு, உதவும் மனம்
இன்னும் பல......
அதனால் தான் உலகம் இன்னும் ஆனந்தமாக சூழல்கிறது-
உதவி என்பது
தன்னிடம் யாசிப்பவனுக்கு பிச்சை போடுவது அல்ல
அடுத்தவருக்கு உதவி தேவை என
நாம் உணரும் போது
அவர் கேட்காமலே
நாமாக செய்வது-
உன் அன்பு நிஜமென்று
நானாக நினைத்துக் கொண்டது
உன் பார்வையில்
கற்பனைதான்-
உங்களைச் சுற்றி வருபவர் எல்லோரும்
உங்களுக்கு நன்மை செய்பவராக மட்டுமே
இருக்க வேண்டும் என்று
எந்த அவசியமும் இல்லை
உங்களை முதுகில் குத்திவிட்டு
உங்கள் முன் தன்னை நல்லவராகக் காட்டுபவராகவும் இருக்கலாம்
எதிரிகளை மன்னியுங்கள்
துரோகிகளை?????
-