நான் கடன் வாங்கி சிரிக்கிறேன்....
மரணத்தை விட மோசமான ஒன்றை மறந்தற்காக....
நான் கடன் வாங்கி சிரிக்கிறேன்.......
மறந்ததை திரும்ப நினைக்காமல் இருக்க....-
பிறந்த மாதம் ஜனவரி
பிறந்த நாள் ஐந்து
உனது எழுத்தோசை கேட்கவே எனது கால்கள் இரண்டும் தானாக முன் இருக்கையை தேடி அலையுதடி உன் வகுப்பறை தொடங்கும் முன்.....
அறியா தவறைக் கூட அறிந்தே செய்கிறேன் நீ என்னை திருத்துவாய் என்னும் நம்பிக்கையில்.........-
இலைமறை காடே இளந்தென்றல் வீடே......
குருதிகள் நிறைந்த நிலமே.......
போர் கலம் கண்ட நாடே.....
தோட்டாக்கள் துளைத்த மணமே.......
வெடி ஓசை எங்கள் கீதம்......
குண்டுகள் தான் நாங்கள் உறங்கும் மெத்தை.....
கலன் ஏறிய மீனே.......
கருவாடாய் தோணியில் திரியும் எந்தன் இனமே........
நாலம் நிறைந்த கண்ணீரை சுமந்த
எந்தன் செல்வமே.......
உணவின்றி அளைந்திடும் எந்தன் இனமே.....
உணர்வை கொள்ளும் மனித இனமே....
இனி அமைதிதான் திரும்பிடாத எந்தன் மனமே....!
இலைமறை காடே இளந்தென்றல் கூடே அமைதிதான் நான் கண்ட கனவே....!-
உன் இரு விழி தூரம் அதிக மடி .......
உன் மை விழி ஓரம் சிந்தும் விழி துளியாய் நான் இருக்க.........
கவி மொழி பேசும் உன் இரு விழிகள் கண் (நீர்) மொழி பேசலாமா...........
மன்னிப்பாய அன்பே.....!-
எனது இரவை தொலைத்தேன்...
கைப்பேசியின் கடைசி பக்கத்தில்
உறவை தொலைத்தேன் தனிமையின் முதற் பக்கத்தில்....
காலம் கடக்கும் வரை தெரியவில்லை நேரத்தின் விலை
காலம் கடந்த பின்னும் புரியவில்லை
உறவுகளின் விலை......
எதுவரை என்று யோசித்து பல நிமிடங்களை நொடிப்பொழுதில் கழித்துதான் மிச்சம்.......
நேரம் ஒருபோதும் எனக்காக காத்திருக்கவில்லை......?-
நீ இல்லையேல் நிஜம் இல்லையே...
நீ இல்லையேல் உறவு என்னும் உலகம் இல்லையே.....
நீ இல்லையேல் கற்பனை என்னும் கவிதை இல்லையே.....
தனிமையில் இனிமை எது என்றால் ஆண்மையில் உள்ள ஒர் பெண்மைதான்-
மாயப்பிம்மத்தில் மிதந்து
கொண்டிருக்கும்......
நமது நினைவுகள் தான்....
காட்சி பிழையோடு காற்றில் மிதந்து
கொண்டிருக்கும்......
நமது கலங்கரை கனா தான்.....-
நாம் மறந்தக் கதை அது....
செல்லிடப் பேசியால் தொலைந்த கதை அது.....
வலையத்தில் ஆரம்பித்து வலையத்திலே முடியும் கதை அது....-
எனது அருமை திராவிடா....
கதிரவன் கண் பட காலையை கண்டவன் நீ
உறங்கிடந்த நட்சத்திரங்களை உலுக்கியவன் நீ.....!
மூடங்கள் ஆயிரம் என்று மூலையில் இருக்காதே......!
கரைப்படிந்த கரங்களை களைபறிக்க வா....!
இறவாக் காலம் என்றும் உனக்கு புதிதல்ல...!
பூட்டி வைக்க நீ ஒன்றும் பறவை அல்ல...!
திராவிடா தீர்க்கமான நம் முகம் அகமலர்ச்சியோடு ஆரம்பிக்கட்டும்....!-