மேலும் கீழுமாக வலிகளின்
சுமைகள் அழுந்திட மௌனமாகிடும்
மனம் !-
Uma S
(S.uma)
216 Followers · 54 Following
https://youtu.be/U1K8zFocRxE
Joined 1 August 2020
15 MAY AT 17:45
மூழ்கடிக்கும் சிந்தனைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்தால்
மீளவே முடியாத ஆழத்துக்கு
சென்று விடுவோம் !-
15 MAY AT 12:12
தண்ணீர் வருமா வராதா என்று
ஓவ்வொரு நாளும் பயந்த
பட்டினத்து வாழ்க்கை மறந்தே
போகும்
கொல்லைபுறத்தில் காவேரி ஆறு
ஓடும் வீட்டிற்கு குடி வந்ததும் !-
15 MAY AT 12:07
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என்று சுற்றித் திரிந்த கால்களை
வகுப்பறையில் கட்டிப் போட்டு
கண்கள் இரண்டையும் கரும்பலகையில் ஒட்டவைத்த
ஆசிரியரிடம் கோபம் ( வருத்தம்)
பயம் தான் !-
15 MAY AT 0:34
வாழ்க்கையில் சில ஆசைகள்
எட்டாக்கனியாகி விடுவதால்
நினைவுகளும் குறுகி விடும்
தேய் பிறை போலவே !
-
15 MAY AT 0:29
தேடாமலேயே வரும் உறக்கம்
சில சங்கடமான நேரங்களில்
எங்கோ ஓடி ஒளிந்து விடுகிறது !-