அந்த பேரழகி:-
அண்ணா!!!
இந்த Bus எங்க போகுது?
பச்சூர் போகுமா???-
-:- What is next? -:-
பொதுத்துறை நிறுவனங்களின்
பங்குகளை மட்டுமே
விற்றுக்கொண்டிருந்தீர்கள்.
நேற்றைக்கு "ஏர் இந்தியா" என்ற
நிறுவனத்தையே விற்றாகிவிட்டது.
நாளை எதை விற்க
இருக்கிறீர்கள்??
எந்த நிறுவனத்திற்கு தேதி
குறித்திருக்கிறீர்கள்??
சேலம் உருக்காலை?
BSNL?
#what is next?
-
மலரென நினைத்து என்னவளின்
தேனிதழில் உறிஞ்சிய தேனில்
போதை தலைக்கேறிவிட்டது போல!!
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து
தட்டுத்தடுமாறி செம்பருத்தி பூவின்
மீது அமர்ந்து தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டது
அந்த வண்ணத்துப்பூச்சி!!!
அப்படித்தான் இருக்குமென்ற
விசயம் தெரிந்த நானே
ஒதுங்கி நின்று ரசிக்கிறேனே!
உனக்கு ஏன் வம்பு!?
தெளிவதற்கு
சிலமணி நேரம் ஆகும்.
அதுவரை அந்த
சொர்க்கத்தை நீ அனுபவி!!!
அது ஒரு பெரும்போதை!!!-
தடை செய்யப்பட்ட
ஆயுதங்கள் பட்டியலில்
கரண்டியையும்
பூரிக்கட்டையையும்
சேர்த்திட வேண்டும்!..- 😄😄😄-
தேவதைகளின்
லச்சினைகளிலும்
இனி உன் உருவமே!
உன் மரபணு வேண்டி
வான்தேவதைகளும்
மன்றாடுவார்கள்
உன் மரபு வழியே
இனி அங்கு தொடர!!
தொல்பொருள் ஆய்வில்
கிடைத்த தேவதைகளின்
உருவமும் நீயும் ஒரே சாயல்!!!
ஆஹா!!!...
பரந்துவிரிந்து கிடக்கும் உன்
நினைவுகளை நாழிகைக்கு
ஒருமுறை செம்மை செய்கிறது
என் இதயம்!!
உன்னோடு பழகிய நாட்கள்
மிக ஆழமாய்ப் பதிந்துவிட்டது
என் நெஞ்சில்... வடுக்களாய்
அல்ல!
குருதியின் கோடுகளாய்!!!-
இரவைக் கிழித்து
நிலவால் தைத்து
மயிலுக்கு வெண்போர்வை
போர்த்திய பொதினிமலைத்
தலைவனாய் மாறிப்போனேன்!
அசதியில் அவள்
தூங்குகையில்!!!
அவளின் முகத்தை மட்டும்
மூடிவிடவில்லை...
அழகு முகம் பார்த்து
ரசித்துக்கொண்டே இரவைக்
கழித்தேன்!!!
(இன்றைக்கு கொடுத்து வைத்தது
அவ்வளவுதான் போலும்!!!😉😉😉)-
எழுதிய கவிதைகளை
புத்தகமாய் அச்சிட்டு
முதல் பிரதி உனக்கே தந்து
கவிதைகளை கன்னி கழிய
வைப்பேன்!
அவற்றைத் நீ தூக்கி வீசினால்
அவை தற்கொலை செய்யும்!
மார்பில் அனைத்து முத்தமிட்டால்
மயிலிறகு போல் குட்டி போடும்
அடுத்த பிரதியாய்!...
அது உன் தங்கைக்கு!!!...😉😉😉-
இவள்
அவளின் சாயல்!
அவளால் உண்டான காயத்தை
செல்லமாய் வருடிச்சென்றது
மெல்லமாய் அழகாக(ன)
அக்கண்கள்....!
இதயக்காயத்தை ஆற்ற
இன்னொரு பெண்ணிடம்
மற(ரு)ந்து தேடுவதா பொழப்பு?
இல்லை இல்லை....!
உன் மனதில் காதல்
தடுப்புச்சுவரை
கட்டியெழுப்பு!
உன் மனதில் காதலால்
நொறுங்கிய இதயத்தை
தட்டியெழுப்பு!!
காதல் மட்டுமல்ல,
பெண்களும் மாயைகளின் மாயை!!!-
-:- புட்டுக்கிச்சி -:-
மதுரசமும் சொர்க்கமும்
எதிரெதிர் மோதிட
இருதரப்பிலும் உடைந்த
பாகங்கள் கண்களாய்
உருமாறி நின்றது!...
வான் தேவதையும்
கடல் கன்னியும்
எதிரெதிர் மோதிட
இருதரப்பிலும் உடைந்த
பாகங்கள் அவளாய்
உருமாறி நின்றது!...
அளவாய் அழகாய்
அம்சமாய் அசத்தலாய்
வார்த்திருக்கிறான்!!!- நிற்க.!
துளி காமம் இல்லா
தூய காதல் செய்தேன்
அதனால்தான் என்னவோ
என் காதல் "புட்டுக்கிச்சி"....-
-:- "RIP பாட்டி" -:-
கடவுளிடம் முறையிடச்
சென்றுவிட்டாயா?
இல்லை கடுப்பில்
சென்றுவிட்டாயா?
உன் "கண்ணாலத்த
பாத்துட்டுதான் நான்
மாய்வேன்" என்றாயே!
அதற்குள் அவசரம் ஏனோ?
இந்த 90's kid க்கு கண்ணாலமே
ஆகாதுனு நீண்ட நித்திரையில்
கலந்துவிட்டாயோ?!!?
என் திருமணத்தின்
முதல் சாப்பாடே உனக்குத்தான்.
மறுபடி பிறந்து வா!
குறைந்தபட்சம்
காகம், குருவியாய் ஆவது
பிறப்பெடுத்து வா!
ஆம்!
உன் ஆசையை நான்
நிவர்த்தி செய்வேன்!!!
-