தனிமை காதலன்   (தனிமை காதலன்)
4 Followers · 6 Following

கவிதை காதலன்
Insta id-vj_Aro
Joined 16 November 2021


கவிதை காதலன்
Insta id-vj_Aro
Joined 16 November 2021

கடற்கரை காதல்

அலையாக இந்த கவி.....🙂

கடற்கரையில் உன் பொற்பாதச்
சுவடுகளை ஒன்றன் பின் ஒன்றாக
முத்தமிடுகிறது ஆழிப்பேரலைகள்..!

மாலை சூரியன் மறையும் வேளை
தென்றலாய் காற்று கவி இசைக்க
தேனிலவாய் என்னவளை
பார்த்த கணம் ......!

அத்தருணம்.....😻

மோகக்காதலில் நானும் மூழ்க
முந்திச்சென்று என்னவளை
முத்தமிடுகிறது என் மூச்சுக்காற்று..!

ஏனைய உயிரை என்னவள் எடுக்க
பார்த்த பார்வையும் புரியவில்லை பரிமாரிய
முத்தங்களும் மாலவில்லை.....!

-



பெண்பாதம்

என்னவள் பாதம் தொட்டு
செல்வதால் தானே பாவம்
கழுவிப்போகிறது பாக்கியம் பெற்ற
கடலழைகள்.......!

அழகுற பூத்த பொற்றாமரையே
ஒரு கணம் யாசித்தது நின்
பொற்பாதங்களாக நான் இருக்க
கூடாதா என்று......!

வான்மேக கூட்டம் மழைச்சாரலாய்
என்னவள் பாதம் சரண்
அடையும் தருணம் தென்றலே கவி
பாடும்......!

தொட்டவுடன் சிணுங்குவது ஏணோ
அவள் பாதம் தொட்டாற்சினுங்கி
தானோ.....!

தனிமைக்கவிஞனாய் தரணியிலே
நான் நின் பொற்பாதங்களுக்கு
கவிபாட கவிஞனாக அல்ல
கடனாளனாக......!

-



ரோஜா தினம்

கிடைக்காத மலரின் மீது தான் என்
ஆசை அதிகமிருந்தது சில
கணம் கடந்துதான் புரிகிறது அந்த
மலர் எனக்கல்ல என் கல்லறைக்கு என்று......!

முள்ளில்தான் வாழ்க்கை என்பது
செடிக்கு தெரியும் ஆனால் என்
காதல் அந்த மலராக உனை
நினைத்து என்றும் வாடுகிறது....!

ரோஜாக்களை பாதுகாக்கும்
முட்களாய் நம் காதலையும்
பாதுகாக்கிறது நம் பிரிவு.....🌹

இணைவோம் காதலர்களாக
மலர்வோம் மணாக்கர்களாக.....!

-



ஆண்மையின் தாய்மை

என்னவளே ஆண்மகனும் தாய்மை
அடைந்தவன்தானடி பெண்ணே...!

தாய்மை உடையவனாயினும்
ஆருயிர்களை ஜீவிக்க முடியாத
அர்ப்பன் நான்......!

வாழ்நாள் முழுவதும் என்
தாய்மையை நெஞ்சிலே சுமக்கும்
நேசாளன் நான்.....!

புரிந்துக்கொள்......!

கரு இறக்க முடியாத காவலன் நான்
இறக்க முடியாதடி இறந்து
போவேனடி.....!

ஆணின் தாய்மை அவளுக்கு
மட்டும் கருவாய் என் உருவாய்....!

-



தாய்மை

சுமை என்பது வலியல்ல வரமே
என்பதை என் தாயின் கருவில்
அவளின் தாய்மை உணர்த்தியது....!

தாய்மையின் வலியை நான்
அறிவேன் அதனால் தானே
அன்று[பிறந்தநாள்] நானும்
அழுதேன் என் தாயுடன்.....!

என் ஒரு சொல் கேட்க ஆயிரம்
முறை அவள் தாயை அழைக்க
வைத்த முட்டாள் நான்.....!

எந்த ஒரு பெண்ணும் படித்து
பெராத புண்ணிய பட்டம்
தாய்மை அவள் வாழ்வின் முழுமை.!

-



நட்பு ஒரு தொடர்கதை

ஆருயிர் தோழியே அனுதினமும்
உன் நியாபகமே.....!

ஆர்ப்பறிக்கும் தென்றலிலே
அழகோவியமாய் நின் பொன்முகம்
வர்ணிக்க வார்த்தைகளா
வேண்டும்.....!

குழந்தை பேச்சோ குறும்பு
தணமோ இரண்டிற்கும் பஞ்சமில்லை இனியவன்
என் அருகில் உள்ளபோது......!

எட்டாதூரத்த்ல் உள்ள வெண்மதி
கண்டேன் ஒரு கணம் வியந்தேன்
என்தோழியின் முகம் என்றோ.....!

என்னாத நாட்களில்லை பேசாத
பேச்சில்லை என் பேரன்பை
கவியாக கவிக்கிறேன்.....!

அன்பாய் நீயும் அறனாய் நானும்
என்றும் இருப்போம் இணை
பிறியா கவிஞர்களாக.....!

-



நட்பு ஒரு தொடர்கதை

ஆருயிர் தோழனே அனுதினமும்
உன் நியாபகமே.....!

ஆர்ப்பறிக்கும் தென்றலிலே
அழகோவியமாய் நின் பொன்முகம்
வர்ணிக்க வார்த்தைகளா
வேண்டும்.....!

குழந்தை பேச்சோ குறும்பு
தணமோ இரண்டிற்கும் பஞ்சமில்லை இனியவன்
என் அருகில் உள்ளபோது......!

எட்டாதூரத்த்ல் உள்ள வெண்மதி
கண்டேன் ஒரு கணம் வியந்தேன்
என்தோழனின் முகம் என்றோ.....!

என்னாத நாட்களில்லை பேசாத
பேச்சில்லை என் பேரன்பை
கவியாக கவிக்கிறேன்.....!

அன்பாய் நீயும் அறனாய் நானும்
என்றும் இருப்போம் இணை
பிறியா கவிஞர்களாக.....!

-



தொலைதூர காதல்

வெண்மதியே......!!!
ஆருயிரானவளே பாதைகள்
பிரிவதில்லை பழகிய நாட்கள்
மறையவில்லை....!

பரிமாறிய முத்தங்களின் எச்சங்கள்
இன்னும் மாயவில்லை ஒட்டாத
இமைஓரங்கள் மூடிய காரணம்
என்னவோ.....!

தென்றலாய் என் காதலை தூது
விடுகிறேன் தேயாத
வெண்மதியாய் எனை வந்து
அடைவாய் என்று......!

என்னவளே என் துணையே
துயிலில் சந்திப்போம் வா என்
கணாக்களில் என்னவளாக....!

_____தனிமை காதலன்




-



காதலி

ஈன்றெடுத்த தாய்க்கு தெரியும் தன் மகன் யாரென்று.....💙

துள்ளி ஒடும் வயதில் தோள் கூடுத்த தோழனுக்கு தெரியும் அவன் நண்பன் யாரென்று.....💙

ஆனால் தன் துன்பத்திலும் இன்பத்தை அளிக்கும் காதலித்கு தன் காதலனை கண்டவுடனா தெரிகிறது.....💔

அன்பு உள்ள இடம் எல்லாம் காதலாக முடியாது தள்ளாடும் வயதிலும் தன் காதலனின் கைகோர்க்கும் தருணமே காதல்..💜

இறுதியில் ஈன்றவர்கள் இருக்க மாட்டார்கள் தோள் குடுத்த தோழன் இருக்க மாட்டான் கைப்பற்றிய காதலியே உன் கதி....🥺

கருவறையில் சுமந்தவள் காதல் கொள்வாளோ தெரியவில்லை ஆனால் உன் கல்லறை செல்லும் வரை உன் காதலி காதல் கொள்வாள்......🥰

_____தனிமை காதலன்

-



காயத்ரி

என்னவளே அழகாம் மூணாம்
பிறையை நெற்றியில் இட்டவளே.........!💜

தடம் தெரியா தரணியிலை தங்க
தாமரையாய் என் விழியிலே
நின் பொண்முகம்.....💙

ஆசை வார்த்தை ஆயிரம் இருக்க
கவிக்கு கவிபாட இப்புவியில்
ஒருவன் உண்டோ.....🤷

அது நான் அன்றோ நின்
பொன்முகம் கண்டோ கவியே
கண்மூடி வெட்கம் என்றதெண்டோ..!

காரிருள் இருளிலே கதிரவனாய்
நின் முகம் அதை காணும்
கண்களோ காணத்திகைப்பில்
காண்பது கன்னிகையா அல்ல
வெண்மதியா என்று.....🌛

காத்திருக்கிறேன் உன் மறுமடலை
என்னி கவிதை காதலனாக.....💔

-


Fetching தனிமை காதலன் Quotes