தமிழன் வீரமணி   (தமிழன் வீரமணி)
106 Followers · 16 Following

பத்து திங்கள் தாய் வயிற்றில்....
மொத்த திங்கள் தமிழ் தாய் மடியில்.....
.....குழந்தையாய்...
Joined 27 February 2018


பத்து திங்கள் தாய் வயிற்றில்....
மொத்த திங்கள் தமிழ் தாய் மடியில்.....
.....குழந்தையாய்...
Joined 27 February 2018

எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருந்தது.
அத்தனைத் துயரங்களையும் கற்களெனக் கடித்து மென்று
ஜீரணித்துக் கொண்டிருந்தவனிடம்
எல்லாம் சரியாகிடும் என யாரோ சொன்னார்கள்.

அப்போது தான்
அவன்
வெடித்தழத் தொடங்கினான்.

-



இந்த நதி என்னில் ஊற்றெடுத்ததுமில்லை
என்னில் முடியப்போவதுமில்லை
இடையினில் சிற்றருவியாய் நானும் கொஞ்சம்
சலசலத்துக் கொள்கிறேன்; அவ்வளவே!

-



காற்றுக்காய் காத்திருந்த பட்டங்கள் அக்காற்றில் தான் கிழிந்துபோகின்றன.
மழைக்காய் காத்திருந்த காகிதக் கப்பல்கள் அம்மழையில் தான் மூழ்கிப்போகின்றன !

-



எத்தனையோ ஏமாற்றங்கள்..
இருந்தும் இன்னமும் எதிர்பார்த்துக்
கொண்டுதானிருக்கிறேன்
வாசலை வெறித்தபடி..

காகம் கரைந்து கொண்டிருக்கிறது

கூடவே காலமும்...!

-



என் தனிமையைக் கொத்தித்தின்ன
ஒவ்வொரு மாலையும்
இவ்விடம் ஒரு பறவை வருவதுண்டு!


காத்திருக்கிறேன் காணவில்லை
அதை இன்று எது கொத்தித்தின்றதோ?

-



தெருவிளக்கு
அணைந்ததைப் பற்றி
மின்மினிக்கு
என்ன கவலை...?

-



தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன்....!
கம்பளி புழுவாக இருந்த போது என்னை ஏன் ரசிக்கவில்லை என தன் வண்ணத்தால் எனது எண்ணத்தில் உரசி சென்று ஒளிந்துகொண்டது இலைமறைவில் !

-



"அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
ஆம் !
அவள் அன்பிற்க்கு உண்டு என்னை அடைக்கும் தாழ் !

-



நதியே உன்னை சேர்ந்த இலை நான் !
நீ நினைக்கும் வரை கூட வருவேன் !

வேண்டாம் என எண்ணும்
ஒரு நன்னாளில்
என்னை கரை சேர்ப்பாயாக.

அதற்காக உன்னை ஒரு போதும் வெறுக்க மாட்டேன் !

-



எளியவன் வேதனையைப் புரிந்துகொள்ள இங்கு எவருமில்லை ! இந்த சோகத்தின் கறைகளை அழுதுதான் கழுவவேண்டுமெனில் கண்ணீர் வங்கிகள் எங்கேனும் இருக்கின்றனவா எனத் தேடுவதைதவிர வேறு வழியே இல்லை !

-


Fetching தமிழன் வீரமணி Quotes