...தாய்மாமன்...
ஒரு குழந்தைக்கு...
தாயின் அன்பையும் தந்தையின்
பாசத்தையும் கொடுத்து வளர்ப்பவர்...
என் அக்கா மகன்/மகள் என்று
அள்ளி அணைத்து கொஞ்சி
தன் தோள் மேல் போட்டு வளர்ப்பவர்...
என் தங்கை மகன்/மகள் என்று
துயிலாது தாலாட்டி சீராட்டி வளர்ப்பவர்...
தாயும் தந்தையும் தன் பிள்ளைக்கு
செய்ய முடியாத செயல்களை கூட
தயங்காமல் செய்வார் கேட்டவுடன்...
அவர் தான் தாய்மாமன்...!!!
தரணியும் உன் காலடியில் கிடக்கும்...
நீ உன் தாய்மாமன் மடியில் கிடக்கும் போது...!!!
--📝 தமிழின் காதலி-
✒️எழுகின்றேன் உங்கள் முன்🙏
✏️கவிதை வரிகளாய்📖
--📝தமிழின் காதலி💚💯 read more
ஓடி ஓடி 🏃🏼♀️உழைத்த உன் கால்களுக்கு😇
ஓய்வு கொடுக்கும்🙃 நேரம்🕙 இது...!!!
பார்த்து 👀ரசித்த புலன்களை
பாதுகாக்கும்🥳 நேரம் 🕕இது...!!!
தேக்கி வைத்த ஆசைகளை🥰
தேடலிடும்🤔 நேரம் 🕙இது...!!!
தேங்கி கிடக்கும் எண்ணங்களை🥰
தேர்ந்தெடுக்கும்🤫 நேரம்🕕 இது...!!!
செய்தன 🙃என்னவை என்று...
ஒரு நொடி!!! - நீ எண்ணி 🤔விட்டு
உறங்கச்😇 செல் என் உறவே💚...!!!
இனிய கனவுகளுடன்😍
இன்பமாக அமையட்டும்😘...!!!
அழகிய இரவு வணக்கம்...!!!
✨✨💚💚-
உன்னை வணங்கி
மகிழ்வோடு வரவேற்கும்
என்னை பிறர்
வணங்கும் படி
மாற்றாவிட்டாலும்
பிறர் தூற்றும் படி
செய்துவிடாதே!-
கனவுகளை புதைத்து
நினைவுகளை தொலைத்து
எண்ணங்களை ஏமாற்றி
கன்னங்களை நனைத்து
காலத்தின் மடியில்
தலையாட்டி பொம்மையாய்
நான்!!!
--நமக்கென இருப்பது
--(நன்மையோ தீமையோ)
--நம்மை சேர்ந்தே தீரும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
எதுவும் நிலை இல்லை!
எவரும் நிலை இல்லை!
வருவதை மனதார ஏற்போம்!
வாழ்க்கை மலரும் அழகாக!
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
பதிவு கீழே👇
-
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்..
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல
நடத்தை இருக்கும்..
அதிக அன்பு இருக்கும் இடத்தில்
அதிக கோபம் இருக்கும்..
ஆனால் ஏனோ மதிகெட்ட
மனதிற்கும் மானிடருக்கும்
இது புரிவதே இல்லை..!-
கைப்பிடித்து நடைபயின்றவுடன் உங்கள்கையில் சேர்ந்தேன்!
எழுதபடிக்க கற்றுக்கொடுத்து ஏணிப்படியில் ஏற்றிவிட்டவரே!
வானம்கூட உயரமல்ல உன் வாகைப்பூமுன்!
கடலும்கூட ஆழமல்ல உன் கற்பனைஉலகில்!
என்றெல்லாம் ஊக்கப்படுத்தி ஊர்பேச செய்தவரே!
பேசக்கூட தயங்கியஎன்னை பேச்சாளர் ஆக்கியவரே!
இன்றளவும்நான் சுடர்விட்டு எரிகிறேன் அணையாமல்!
காரணம் தீக்குச்சியாக நீங்கள்உள்ளீர் அதனைதடுக்க!
என்பெருமை பேசும்மற்றோர் அறியார் உங்கள்அருமையை!
கரம்பிடித்து நீங்கள் கற்றுக்கொடுத்த எழுத்து!
கவிதை வரிகளாய் உங்களுக்கு சமர்ப்பணம்!
கல்விமூலம் வாழ்க்கையைத் தந்தகடவுளே என்ஆசானே!-
கனவுகளுக்கு உயிர் கொடுக்க
கணங்கள் பாராமல்
கண்கள் மூடாமல்
கடின உழைப்போடு
விடா முயற்சியோடு
போராட வேண்டும்!-
என் முயற்சியை ஊக்குவிக்கும்
வண்ணமாக
உங்கள் வரிகளை தாருங்கள்
உறவுகளே!!!
கீழே பதிவு 👇-