தமிழ் பித்தன் ❤️   (தமிழ் பித்தன் ❣️)
96 Followers · 135 Following

read more
Joined 10 December 2017


read more
Joined 10 December 2017

ம்ம்
இதமான முத்தங்கள் தர சற்று தாமதம்
வெட்கத்தில் மூடிக்கொண்டது
ஆடையாய்
தேநீர்

-



ஈரடியில் ஒரு கவிதை உனைப் பற்றி நான் எழுத
முந்திக்கொண்டது உன் பெயர் !!!

அடடா அக்காகிதமும் பத்திரமானது என் வீட்டு அலமாரியில்

-



உன்னிடம் சொல்லுவதாக எண்ணி எண்ணி என் காதலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.....

ஒத்திகை பார்க்கும் வேளைகளில் ஒப்பனைக் கண்ணாடியிடம்

-



மழை பெய்யும் மாலை நேரம்
ஆங்காங்கே பூக்களின் மாநாடு
பகலில் நிலவு போலும் அவளுடன்
நானும் நவரசம் செய்யும் என் குடையும்
கொட்டும் மழை
கடும் காற்று
இரட்டைக் கிழவி போல் மின்னலும் இடியும்
தீக்குச்சியின் தலைகனம் பெட்டியை உரசும் வரை
ஒவ்வொரு முறை அவள் மெய் தீண்டலினால்
நடுங்கும் குளிரிலும் என் உடல் தீ பற்றி எரிகிறது...

அவள் என் எட்டாம் அதிசயம்

-



சோவென்று பெய்யும் மழை
மழைக்கால ஒப்பனைகளாய்
இடியும் மின்னலும்
தட்டானின் தந்தியில்லா சேவை
தவளைகளின் கீர்க் சத்தம்
குளிக்கும் மரங்கள்
சலவை செய்யும் பறவைகளின் இறகு
கரு தரிக்கும் புற்கள்
மின்சார துண்டிப்பு
தார் சாலைகளில் வழிந்தோடும் மழை
சாளரங்களின் மோதல்
சூடான எண்ணெய் பண்டமும்
அம்மாவின் தேநீர் விருந்தும்

மழைக்கால வருணனைகள்

-



காதல் விழிகள்
கவிதை இதழ்கள்
தடம் புரண்ட பல்வரிசை
துப்பட்டாவின் துரிதமான தீண்டல்
காற்றின் கணிசமான ஈரம்
எதுகை மோனையாய்
இடியும் மின்னலும்
பெய்யாத மழையிலும்
அவளின் வாசனை
தேநீர் நிலையத்தில்
அவளின் கதகதப்பான கன்னக் குழிகளுக்கு
கைகள் தேய்க்கிறாள்
அடடா தேநீர் நிலையத்தில்
ஆன்ட்ராய்டு தேவதை



-



நீ பார்த்த ஓரப் பார்வையில் பேருந்து நிலையத்தில் நிற்கும் நான் சர்வதேச விமானமானேன்

-



நீ எறிந்த மிளகாய் துண்டுகளுக்கு என்ன சுவை???

அதில்
அணிவகுக்கும் எறும்புகளுக்கு சர்க்கரை வியாதியோ!!

-



ஆவி பறக்கும் தேநீர் கடையில்
தேநீர் குடுவையோடு நானும்
ஈக்களும்!!!

பேருந்து நிறுத்தத்தில்
தேவதைகளின் இருக்கைகளில் நீயும் பூப்போட்ட துப்பட்டாவும்!!!

சற்றென்று என் மீது உன்பார்வை படர்கையில்!

வாயில்லா பூச்சிபோல என் ஹார்மோன்கள் என்ன செய்யும்?

செல்களுக்கு தகவல் அனுப்பி வேலைவெட்டி பார்க்கச் சொல்லும்...

-



உன் அழகை எழுதச் சொல்லி
பேனா முள்ளுக்கு ஆணையிட்டேன்!!!
பேராசை பேனா முள்ளோ
பகல் நிலவு பட்டத்தை
உனக்கள்ளி கொடுத்திடுச்சு...

உன் நிழலைத் தாங்கச் சொல்லி
கை விரல்களுக்கு கடிதமிட்டேன்!!!
கட்டழக கண்டவுடன்
கவி எழுத தொடங்கிருச்சு...

கண்களுக்கு ஆயிரமுறை
உனை இரசிக்கச் சொல்லி
தூதுவிட்டேன்!!!
அரை நொடியில்
மரணத்தை மலிவாகத் தந்திடுச்சு...


-


Fetching தமிழ் பித்தன் ❤️ Quotes