உனக்கான என் காத்திருப்புக்கெல்லாம்
நான் கவலை கொள்ளவில்லை...
நான் காத்திருக்கிறேன்
என்பதை நீ உணரவேயில்லை என்பதே என் பெருங்கவலை..!-
பிரியங்களை
தேடும் போதெல்லாம்
பிரிவுகள்
நிகழ்ந்து விடுகிறது...
பிரிவுகள்
நிகழும் போதெல்லாம்
பிரியங்கள்
குறைந்து விடுமா என்ன...?
#பிரியமென்பது-
காணும்
பொருளெல்லாம்
நீ தான்
கண்ணுக்கு
தெரிகிறாய்....
தேடும்
பொழுதெல்லாம்
நிலவாக
விண்ணுக்குள்
ஓடி ஒளிகிறாய்... !-
ஒவ்வொரு முறையும்
என்னை முழுதும் ஆட்கொண்டு
கடந்தபின் ...
நீங்கா தாக்கத்துடன்
என்னை நிர்க்கதியாக
நிற்க்கவைக்கும்... என்னவளுக்கும்
சில நேரம்
அந்த புயலின் சாயல்...!-
நேற்று இன்று நாளை
என்ற காலங்களின் கணக்கை
நீ உடைப்பாய்..
காற்று இருக்கும்
காலம் வரை
நீயும் இருப்பாய்... !-
நிராகரிப்பென்பது
எனக்கொன்றும்
புதிதல்ல.....
அதைக் கொடுத்துச்
செல்பவர்கள் மீது
நான் வைத்திருக்கும்
நம்பிக்கையைப் பொறுத்தே
வலிகள் வேறுபடுகிறது....!
-
மறக்க இயலா
வலிகளென்று
ஏதுமில்லை.....
ஆனாலும்..
வலிகளை மறக்கும் முன்
நம்மை நாமே மறந்திருப்போம் என்பதே
மறுக்க இயலா உண்மை.....!-
உன்னால் ஓயாமல்
ஆடிக்கொண்டிருக்கும்
இந்த மன ஊஞ்சல்,
ஒரு கருணையற்ற
புயலுக்காக
காத்திருக்கிறது,
இனி நீ திரும்புவதில்லை
என்பதை எப்போது
நான் உணர்கிறேனோ,
அப்போது அது அடியோடு
அறுந்து விழுமென நம்புகிறேன்...!-
எத்தனை முறை
உன்னோடு
சண்டையிட்டுக்
கொண்டாலும்,
மீண்டும் மீண்டு்ம்
உன்னைச் சேரும்
வரம் மட்டும்
வேண்டும் எனக்கு...!-