திவ்யா கார்த்திக்📝  
3 Followers · 4 Following

Joined 12 August 2023


Joined 12 August 2023

அண்ணன் தம்பி வாங்கிக் கொடுத்த பொருட்கள் மட்டும் அலமாரியில் பத்திரமாக அடுக்கப் பட்டிருக்கிறது...

காரணம்....,

அவளுக்கு மட்டுமே தெரியும் அதை வாங்க அவன் எவ்வளவு ரத்த வியர்வை சிந்தி சம்பாதித்திருப்பான் என்று!!!

-



தாய் மாமன்
எந்த பந்தலும் தாய் மாமன் பந்தம் இல்லாமல் நிறைவதில்லை...
உடன் பிறந்தவளுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் விட்டு விலகாத ஒரே உறவு தாய் மாமன் உறவு...
ஆண் உறவுகளிலே தாய் என்ற பட்டத்தை உடையவன்...
ஆயிரம் பேர் சீர் செய்தாலும் நிறையாத சபை, தாய் மாமன் வந்து நின்றாலே நிறைந்து விடும்...
தன் உடன் பிறந்தவளுக்கு கடன்பட்டாவது காலம் முழுவதும் சீர் செய்ய கடமை பட்டவன் தாய் மாமன்...
பிறந்த போது கையில் தாங்கியவன்,
காது குத்தில் மடியில் தாங்குவான்...
சடங்கானதும் பாதுகாவலனாவான்
திருமணத்தன்று இறுதியாக மாமன் காப்பை அவிழ்த்து, மணமகனிடம் கையை பிடித்து கொடுத்து தன் கடமையை நிறைவு செய்வான்...
"""என் மாமன் கிட்ட கேட்டா எதுவா இருந்தாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் ஆணி வேர் தான் தாய்மாமன்"""



-



உடன் பிறந்தவனின் அழைப்பு...,
பேசுவதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை...
என்ன பேசுகிறோம் என்றும் தெரியவில்லை...
ஆனாலும், பேசிக்கொண்டே தான் இருப்போம்...
"என்ன பண்ற... இருக்கேன் நீ என்ன பண்ற" என்ற வார்த்தை மட்டும் குறைந்தது 8முறையாவது வந்து விடும்...
ஆனாலும், 9 வது முறையும் எட்டி பார்க்கும் சில சமயங்களில்...
இவை எல்லாம் content கிடைக்காத வரை தான்...
பேசுவதற்கு content மட்டும் கிடைத்தால் போதும்....
கிடைத்த content ஏ கடுப்பாகும் அளவிற்கு பேசுவோம்...
தினமும் வரும் அழைப்பு ஒரு நாள் தாமதமாக வந்தாலும், தாமதித்த சில மணி துளிகளுள் எண்ண ஓட்டங்கள் பலவாறு ஓட ஆரம்பித்து விடும்...
நான் பேச இயலா தருணங்களில் என் சிந்தனை மொத்தத்திலும் நீயே குடி கொண்டிருப்பாய்...
கடல் கடந்த தொலைவில் நீ இருந்தாலும், என் பலமும், ஆறுதலும் நீ தான் என்பதை சொல்ல தவறியதில்லை உன் குரலொழிகள்...
என்றும் உன் அழைப்பினை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்...,

-



பண்டிகை காலங்களில் பல நாள் முன்பிருந்தே பசி எடுக்காது.
ஊருக்கு செல்லும் தருணங்களில் முதல் நாள் இரவு முதலே உறக்கம் வராது.
ஒரு நாள் முழுக்க உணவின்றி சுற்றி திரிந்தாலும், ஒரு நிமிடம் கூட சோர்வு வராது.
ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை இல்லை என்றாலும் கோடீஸ்வரன் ஆகவே தோரணை இருந்தது.
இப்போது எல்லாம் இந்த உணர்வுகள் என்னுள் வருவதே இல்லை.
என்ன காரணம்?
ஏன் இந்த வெறுமை?
கடந்து வந்த கடினமான தருணங்களா?
நிராசையாகி போன பேராசைகளா?
நிறைவேறாத கனவுகளா?
அவமானத்தின் அழுகையை அடக்கியதன் விளைவா?
காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஆனால்,
இப்போதெல்லாம்
எதன் மீதும் ஒரு தீரா காதல் ஏற்படுவதில்லை!!!
எதை பார்த்தும் ஒரு பிரமிப்பு தோன்றுவதில்லை!!!

-



"கவலைப் படாதே எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்பவனை விட,
"கவலைப் படாதே நான் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறேன் " என்று சொல்பவன் கிடைத்தால் அந்த வாழ்க்கை வரமே!!!

-



நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் ஏழைகளுக்கு உதவி பண்ணனும்னு நினைச்சேன்....
இப்போ தான் தெரியுது
அந்த ஏழையே நான் தான்னு!!!

-



நீ என் அருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ,
அவ்வளவு உண்மை நீ
எனக்குள் இருக்கிறாய் என்பதும்!!!

-



நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் நினைவுகள் என்னோடு இருக்கின்றன!
என்ன பயன்?
நிலைத்து நிற்கும் அளவிற்கு நீ இல்லையே!
அடை மழைக்கு பின்னர் அசைந்த இலையில் இருந்து உதிரும் மழைத்துளி போல,
சொட்டு சொட்டாய் வடிகிறது விழிகளின் வழியே கண்ணீர் துளிகள்!!!

-



என் மகள்
என் மகள் என்று சொல்லி சொல்லியே இறுமாப்பு அடைகிறேன்...
இந்த பிறப்புக்கு இதுவே போதும் என்று!!!
அவள் பொட்டு வைத்து விட்டு போவாள் நான் புருவத்தை உயர்த்தி கொள்வேன்!
நான் அழும் போதெல்லாம் கண்ணீர் குளத்தின் மொத்த நீரையும் வாரி இறைத்து வற்ற வைத்து விடுகிறாய் உன் பிஞ்சு விரல்களால்!!!
அவள் கோபம் கொள்ளும் போதெல்லாம் பக்கத்திலே அமர்ந்து விடுவேன்!
சமாதானத்திற்காக தலை நிமிரும் போது யாருமில்லை என்றால் என் பிள்ளை வாடி போய் விடுவாள்!

-



வெள்ளை துணி ஏந்தி தந்ததாலோ என்னவோ தேவதை போலவே‌ சுற்றி திரிகிறாய் இதுவரையிலும்!
செம்பு நீர் மொத்தமும் சிந்தினாலும்
நீ கொண்டு வந்த அழகினில் தாகம் தீர்ந்ததடி!
அள்ளி கொடுத்தாலும் ஆறாத என் மனம் மகள் கிள்ளி கொடுப்பதில் நிறைந்து விடுகிறது!
கோவில் வேண்டாம் நீ வரையும் கோலம் போதும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றன சில தெய்வங்கள்!
நீ வளர ஆரம்பித்ததும் நாங்கள் குழந்தையாய் மாறி விட்டோம்,
கண்டிக்கவும் தண்டிக்கவும் குருவாய் எங்கள் குலதெய்வம் நீ இருக்கிறாயே!

-


Fetching திவ்யா கார்த்திக்📝 Quotes