தினேஷ்குமார் பாலசுப்ரமணியன்   (தினேஷ்குமார்பாலசுப்ரமணியன்)
92 Followers · 68 Following

Joined 13 April 2019


Joined 13 April 2019

வலைவிரித்துக் காத்திருந்த அவனுக்கு இரை சிக்கியதோ இல்லையோ, வைகறை பனித்துளிகள் சில பரிசிலாக கிடைத்தது.

பசியாற முடியாதுதான் , பாவம் காத்திருக்கட்டும் பனித்துளிகளின் துணையோடு...!!!

-



ஹைக்கூ

அடடா ஏன் ? இந்த வானத்தில் கதிரவனும் ,மேகங்களும் காணவில்லை...!!!
நீலச்சாயமிட்ட அவள் நகம்...💅

-



ஹைக்கூ

கவலைகரைக்க எனை அழைத்தாய்,
கண்மை மட்டுங்கரைத்து செல்கிறேன்...?!?!
கண்ணீர்.!!!

-



சுடுகாட்டு மணல்

பலகோடி இருஜோடிக் கண்களின் கண்ணீர்த் துளிகளை உறிஞ்சியும் தாகமாடங்கா "சுடுகாட்டு மணல்"
பெரும்பேராசைக்கு மோசமான உதாரணம்...💔

-



பேருந்து - பெருங்காதலுந்து 🚍❣️

திடீர் மின்வெட்டின் இருளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டே தீப்பெட்டி தேடும் கண்களைப் போல👁️

உன் படக்கென்ற எனைநோக்கிய திரும்பல்களுக்கெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக மரணித்து, ஜனனித்து கொண்டே நம் காதலை தேடி உறவாடுகிறது என் மனம்...!!!♥️

-



முண்டாசுக் கவிக்கு முத்தமிழில் கவியியற்றி வாழ்த்தினால் குழந்தை விளையாட்டு போலிருக்கும்;

இருந்தபோதிலும் மகாக்கவி பெருமகனார் உயிருனும்பெரிதாய் நேசித்த தமிழ்த்தாயின் தோட்டத்து வார்த்தைப் பூக்களில் ஓரிரண்டு பூக்களை எடுத்து, தொடுத்து வாழ்த்தி வணங்குகிறேன்...!!!

"பைந்தமிழ் தேர்பாகனே நின் மாயஉடல் மறைந்திருந்தாலும் , மங்காப் புகழ்கொண்ட உம் வார்த்தைகளில் தமிழ் வாழும், அச்செந்தமிழினூடே நீ வாழ்வாங்கு வாழ்வாய்" ...!

-



தண்ணீர்க் காதல்❣️

பூமகளின் கமலப் பாதம்பட🦶🌺 ,
இடைவெளி கொடுக்கவெண்ணியோ...? ஏனோ...?

"தண்ணீர்"💦

தாமரையிலைகளில் திரல்களாக தங்குவதே இல்லை...!!! 😍

-



அழகிய நாட்கள்பட்டியலில் ...!

அகக் களிப்பு❣️ ஊட்டிய நாட்கள் மட்டுமல்ல,

மாறாக

மறந்தும் மறந்துவிடா வண்ணம் உங்கள் மனதில் எரிபொருள் ஊற்றி உங்கள் உள்ளத்திற்கும் , உடலிற்க்கும் ஆற்றல் கொடுத்துக்கொண்டு இருக்கும் "குறிக்கோளை " கண்டறிந்த நாளும் ;

"முதல் மரியாதையுடன் " முதல் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவை ...!!!🆙

-



தண்டவாளத் தாலாட்டு

வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு, வயதுமுதிர்வு இவையாவும் இமைக்கு மேல் சற்று அழுத்த;

இதுதான் சமயமென்று விழித்திரைகள் சுருட்டிக்கொள்ள ;

தலையணையாகத் தாங்கியுதவ கை முன்வர ;

இதுகண்ட ஜன்னல் தன் தாய்மடியுந் தந்து தாலாட்டும் பாடியது தண்டவாள தாளத்தோடு ஸ்ருதி சேர்த்து...!!!🎵🎶❣️

-



நம் பிரிவை எழுத எத்தணிக்கையில் என் எண்ணத் தூவலில் சேகரித்த நினைவுகளின் மையோ தீராமலிருந்தும் அதிகம்பொங்கி , அலங்கோலம் ஆக்கி அழ வைக்கிறது உயிரெழுத்துக்களை....😢

-


Fetching தினேஷ்குமார் பாலசுப்ரமணியன் Quotes