கொஞ்சும் மொழியில் மட்டுமே காதலை சொல்ல முடியும் என்று நினைத்தால்
இங்கு பல காதல்கள் பரிதவித்துவிடும்!
காதலின் பரிணாமத்தை கொஞ்சலில் மட்டும் அடக்கி விட முடியாது!
அவ்வளவு ஆழம்!-
17/03
தமிழ்நேசன்
மென்பொறியாளன்
இசையின் காதலன் ❤️🎶
கவிதைகளுக்காக என்னை... read more
வெளிச்சத்தில் விருப்பமில்லை
என்று தான் ஆதவன் அடங்கிய பின் ஆக்கிரமிக்கிறது இரவு.
ஆனால் இரவுக்கு அதிர்ச்சி அளிக்க பின் தொடர்கிறது நிலவு.
பற்றாக்குறை நாம் இரவுக்கும் நிலவுக்கும் உறவு கொண்டாடி கொள்கிறோம்!
இதில் இரவுக்கும் விருப்பமில்லை!
நிலவுக்கு வருத்தமில்லை!
எழுதும் எனக்கும் எது உண்மையென்று புலப்படவுமில்லை!
ஆக காண்போரின் கண்ணில் கற்பனைகள் ஏராளம்,
அவர்கள் கற்பனைக்குள் சிக்கி
உன் ஆசைகளை விற்பனை செய்து விடாதே!-
இறகுகளை வெட்டி விட்ட பின்னும்
பறக்க முயலும் பறவைக்கு எளிதில் தெரிவதில்லை
பறப்பது எளிதில்லை என்று!
முனைப்பும் உழைப்பும் முன்னை விட அதிகம் இருந்து முன் சென்று முந்த முடியாது!
வடுக்கள் ஆறி, சிறகு முளைக்க காலம் பிடிக்கும்.
மீறி முந்தி முனைந்தால் ஏமாற்றம் வலி நம்பிக்கையின்மையே மிஞ்சும்!
ஆற விடு, காலம் கொடு!
மாற்றம் பிறக்கும்!
மனிதா உனக்கும் இது பொருத்தமே!-
நிலவில் மட்டுமே
வெளிச்சம் இல்லை
என்று உணரும் போது தான்
மெழுகுவத்தி மலர்கிறது!
-
When we search for ever lasting love
Out of curiosity
Remeber it's here already
Look inside you
Deeper, dig deeper
Cleanse your soul
Lasting love is right there
Overflowing like an ocean
Carry it with all the heart
Know that you can pour everlasting love 🤍
-
ஈன்றவரை புலால் கொடுத்து,
முடிந்தவரை நிழல் கொடுத்து,
தேவைகளை பலி கொடுத்து,
தேவையிருந்தும் வெளியே
சொல்லாமல்,
அருளும் நீரில் மட்டும்
ஆசுவாசப்படுத்தி,
காயும் வரை ஓயாமல்,
வாழ பழகி கொள்கிறேன்!
-
தனது,
ஆசையை விட்டு
ஆதங்கத்தை விட்டு
சுயநலத்தை விட்டு
அற்பங்களை விட்டு
அன்பை ஒத்தி,
அறிவை சுத்தி,
அன்பால் பொத்தி,
கொடுப்பது!
இந்த புரிதல் வரும் நேரம்
மரணமாக கூட இருக்கலாம்!
பி. கு: எனக்கு இன்னும் முழு
மனமாய் வரவில்லை!
-
தெளியாது நானும்
புரியாமல் நோக்கும் போது
பிறக்கும் மொழிகளே
பின்னாளில் தெளிய வைக்கிறது!-