Thiyagarajan CA   (தியா)
98 Followers · 39 Following

Chartered Accountant
Joined 12 June 2017


Chartered Accountant
Joined 12 June 2017
26 FEB AT 17:41

புதைத்த மனிதனின் உடலில்
புழு ஒன்று பிறந்தது

உலகில் சமநிலை நிறுவப்பட்டது !

-


1 JAN AT 12:35

அனைத்துகொள்ளுதலின் போது வரும் கதகதப்பை போன்றவன்

அவனே

அனைத்துகொள்ளுதலின் போது வரும் வியர்வையை போன்றவன்

மானுடம் என்றுமே மானுடத்தின் புதிர் !

-


22 DEC 2024 AT 1:18

இசை மழலை குழல் குருவி
காமம் காதல் பெண் முத்தம்
குளிர் வெயில் பணி பாலை
உறக்கம் உண்மை கோபம் மரணம்

அப்பப்பா

கண்டிப்பாக கடவுள் தான் உலகை படைத்திருக்கிறான்.

-


21 DEC 2024 AT 23:30

ஒரு இசையில் திளைத்து
அதில் விழுந்து
அதில் புதைந்து
அதிலேயே இறந்தும் விடு

அதிசயித்து பார்க்கவோ
அண்ணார்ந்து பார்க்கவோ
இந்த பூமியில் ஏதும் இல்லை

எங்கும் அற்ப உயிர்கள்

-


16 DEC 2024 AT 22:10

எல்லா நிகழ்காலத்திலும்
கடந்த காலத்தின் கவலைகள்

எல்லா கடந்த காலத்திலும்
எதிர்காலத்தின் ஏக்கங்கள்

எல்லா எதிர்காலத்திலும்
நிகழ் காலத்தின் கர்மங்கள்

-


2 SEP 2024 AT 14:48

ஏதும் வேண்டாம்
இந்த கட்டிலில் இருந்து இறங்க ஒரு காரணம் மட்டும் கொடுங்கள்

இல்லையேல்

இருண்ட அறையில்
துர்நாற்றம் வீசும் ஆடையில்
இந்த கட்டிலில்
தொலைந்ததின் நினைவில் தொலைந்துப்போவேன் !

-


25 AUG 2024 AT 1:54

எதுவுமே வேண்டாம்
நிம்மதி போதுமென்ற
இடத்தில் முடிகிறது
வாழ்வின் முன்னுரை

-


17 AUG 2024 AT 22:17

காகித கப்பலுக்கு

நீரென்றால் பயம் !

-


17 AUG 2024 AT 22:12

உலர்ந்த துணிகளை அள்ளியே பிறகே
உதிர தொடங்கினாள் மேகம்

இத்தனைக்கு பிறகும்
இயற்கைக்கு நம்மேல் எவ்வளவு இரக்கம்

-


23 JUL 2024 AT 4:53

ஒரே ஒருமுறை கை கூப்பி
கேட்டுவிட்டால் கொடுத்து விடுவானோ என்னவோ

அவனாய் கொடுக்கட்டும் என் நான்

கேட்டால் கொடுக்கலாம் என இறைவன் !!!

-


Fetching Thiyagarajan CA Quotes