13 JAN 2019 AT 13:20

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
தமிழர் வாழ்வில்
உரமாகும்.
புதுப் புது வண்ணம்
புதுப் புது பொலிவு
இல்லம் இன்னும்
அழகாகும்.
புதுப் புது சேலை
புதுப் புது வேட்டி
இருவர் மனதும்
இனிப்பாகும்.
குடும்பமாய் சேர்ந்து
சங்கொலி தந்து
குதூகலமாய் சொல்வோம்
பொங்கலோ பொங்கல்.

- Thiru🌹