THE PEN   (முத்து விக்னேஷ்✍️)
167 Followers · 1.9k Following

மை இல்லாத பேனா கொண்டு கவிதை தீட்ட வந்தவன் நான் ✍️

மலை மலையாய் வலம் வருபவன் ⛰️⛰️⛰️
Joined 9 March 2025


மை இல்லாத பேனா கொண்டு கவிதை தீட்ட வந்தவன் நான் ✍️

மலை மலையாய் வலம் வருபவன் ⛰️⛰️⛰️
Joined 9 March 2025
17 MAY AT 12:50

மக்கிய மக்காத
குப்பைகளை
சேகரிப்பதற்கு கூட
தவறாமல் தினமும்
ஆட்கள் வருகிறார்கள்....
என் மனதில் இருக்கும்
கவலைகளை சேகரிக்க
ஒரு காக்கை குருவி
கூட இல்லை என்பது
தான் நிஜம்......

-


10 MAY AT 18:14

தவறே செய்யாமல்
தானாய்
விருப்பப்பட்டு
மாட்டிக்கொண்ட
சிறை வெளிநாடு✈️

வெளியே வர வழி
இருந்தும் பெயில்
தர மறுக்கிறது கடன்💸

-


9 MAY AT 13:46

அவளை வர்ணிக்க
வார்த்தைகளை தேடி
உலகில் நான் நுழையாத
நூலகங்களே இல்லை,
வார்த்தைகளை
தேடி தேடி வயதானதே
தவிர அவள் அழகை
வர்ணிக்க இன்னும்
வார்த்தைகள்
கிடைத்த பாடில்லை .....

-


5 MAY AT 16:23

நீ கட்டியணைத்து
உறங்கிய டெட்டி பியரை🐻
ஏலம் விட முயற்சிக்கிறார்கள்,
பிரத்தியேக விமானத்தில் வந்து பிரம்மனும் கலந்து கொண்டார்..

-


1 MAY AT 10:15

செய்யும் தொழில்
தெய்வம் என்று
சொல்பவர்கள்
இருக்கும் நாட்டில் தான் ,

தெய்வத்தை வைத்து
தொழில் செய்பவரும் இருக்கிறார்கள் ..🙂

-


30 APR AT 7:55

விமானம்

நான் அதிகமான
சுற்றுலாப் பயணிகளை
சுமந்து செல்வதை விட ,
அதிகமான சூழ்நிலை
கைதிகளையே
சுமந்து செல்கிறேன் .....✈️

-


29 APR AT 13:56

பிடித்தவாறு கவிதை எழுதியதினால் ஒருவன் கவிஞன் ஆகிவிடலாம்....

பிடித்த ஒருவன் எழுதியதால் அனைத்து வார்த்தைகளும் கவிதையாகி போனது...

-


26 APR AT 7:44

பிரம்மனின் அறை முழுவதும் உன்னுடைய புகைப்படம் ஏன் என்று கேட்டால் உன்னை போலவே இன்னொரு பெண்ணை படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம் பல வருடமாக,

இன்றளவும் படைக்க முடியாமல் பிரம்மா....

-


24 APR AT 10:29

ஓட்டுனரின் வாகனம்

உன்னோடு சேர்ந்து
தினமும் நானும்
ஓடுகிறேன் உன்
வறுமையை போக்க .

-


20 APR AT 8:24

எழுத்துக்களை தேடி ,
வார்த்தைகளை சேர்த்து,
அதில் உன் அழகினை கோர்த்து, எழுதி முடிக்கையிலே ,
எப்பேற்பட்ட கவிதை
என்று ஊரே வியக்கிறது ..
இல்லாத ஒருத்திக்கு தான் எப்பொழுதும் என் கவிதை பிறக்கிறது.. 😒

-


Fetching THE PEN Quotes