ஒன்று நடந்தே தீரும்
என்றால் அதில்
கவலைப்பட
என்ன இருக்கிறது
-கண்ணதாசன்-
போதும் என்று நொந்து போய்,
புது வாழ்வை தேடுகிறீர்களா?
புதிய புத்தகம் ஒன்றை
வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்.
- இங்கர்சால்.-
அமைதி சமுத்திரம்
போன்றது
பேச்சு நதி போன்றது
சமுத்திரம் உங்களை
தேடிக் கொண்டிருக்கும்
பொழுது நதியினுள்
மூழ்கி விட வேண்டாம்
-ரூமி-
பூக்களை விற்ற
காசில் என்ன
வாங்கி விடப்
போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்
-படித்தது-
எவள் அழகில்
மயங்கியும்
ஒன்றும் ஆகப்
போவதில்லை
உன் அழகில்
மயங்கி உனதானேன்-
எல்லாம் இருந்தும்...
இல்லாதவனிடம்
இருப்பதைப் பார்த்து
பொறாமைப்படுகிறவர்கள்
இருப்பவர்கள் மட்டுமே...!
-
இஷ்டப்பட்டு உழைத்தால்
சுகப்பிரசவம்...
கஷ்டப்பட்டு உழைத்தால்
அறுவை சிகிச்சை ...
"தொழில் "-
வார்த்தைகள் அற்ற கவிதை என்னால் எழுத முடியும் என்பது எனக்கு தெரியும்...
அதை உன்னால் வாசிக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும்...-
பார்ப்பது ஒரு சுகம்..
பார்க்க முடியாமல் தவிப்பது
எண்ணில் அடங்கா சுகம்.-