வலிகள் ஆயிரம்,
வாழ்க்கை அவளால் ஒரு காவியம் !
மீண்டு வந்த பாதை,
மீள முடியாத அளவுக்கு உன் காதல் !
மருத்துவமனை நோயாளி,
நீ கொடுத்த மாய மந்திர அன்பால் !
கண்கள் இல்லை,
உன் நினைவுகள் என்னை மறைத்ததால் !
மூச்சு இல்லை,
உன் முத்தம் என்னை தடுத்ததால் !
பேச்சு இல்லை,
உன் கண்கள் என்னை கவர்ந்ததால் !
செவி இல்லை,
உன் வார்த்தைகள் எனக்கு கொடுத்த வலியால் !
கைகள் இல்லை,
நீ விட்டு சென்றதால் !
கால்கள் இல்லை,
உன்னை கண்டுபிடிக்க முடியாததால் !
முயற்சி செய்கிறேன் முகம் உயர !!-
தேடினேன் தேடினேன்
உன் அன்பை
தேடினேன் தேடினேன்
என் அன்பின் வெளிப்பாடுகளை
தேடினேன் தேடினேன்
உன் மனதை
தேடினேன் தேடினேன்
உன் நினைவுகளை
தேடினேன் தேடினேன்
உனது சிந்தனைகளை
தேடவில்லை எனது வாழ்கையை
தேடலின் முடிவு நீ
தேடலின் விடை நீ !!!
-
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்;
நேர்பார்வை உன்னை பார்த்தேன்
முழுவதுமாய் என்னை மறந்தேன்;
நீ கண் சிமிட்டும் கணம்,
கரைந்து போகுதே என் மனம்;
ஆடை தரும் அழகினிலே கூடிய
அமுதச் சிரிப்பும் அதிசயமாய்;
மனம் சிந்திக்க சொல்கிறதே,
என் சிந்தனைக் காவியமே;
நம் கைகள் நான்கும் சிறகாக,
சிகரம் தொடுவோம் என்னன்பே;
சிகரம் தொடும் தூரம் வரை, நாம் சிறகடித்து பறக்கலாம் வா மலரே!!-
இடை தொட்டு இதழ் இனைய இயல்பாய் இருப்பாள்!
கண நேரம் கண்கள் நோக்க வெட்கத்தில் பூத்திடுவாள்!!
கண்ணத்து முத்தங்கள் கணக்கில்லாமல் பொழிந்திடுவாள்!
அலைபேசியில் படம் எடுக்க அப்படி சிரித்திடுவாள்!!
கொஞ்சலும் கெஞ்சலும் நிகழ,
என் கண்களை மூடி முதல் முத்தம் கொடுத்தாள்!!
மின்னல் பதித்த விழி,
மின்சாரம் போல் அவள் முகம்!!
காலம் பல கடந்தாலும், கைகள் கோர்த்து நடக்கலாம் வா என் கண்மணியே!!!-
வலை தளத்தில் உன்னை சந்தித்தேன் ;
வளைந்து நெளிந்து நேசித்தேன் !!
நேசித்த உன்னை மூச்சுக் காற்றாய் சுவாசித்தேன் !!
அறுபது ஆண்கள் அங்கே இருந்தும் அன்பால் உன்னை ரசித்தேன் !!
திருமணம் என்னும் பாதை அமைத்து அதில் பயணிக்க வித்திட்டேன் !!-
அவளை விட அவள் கொடுத்த நினைவுகளுக்கு நான் என்றும் அடிமை !!!
-
புதிதாக உன்னை பார்த்தேன் !!
புன் சிரிப்புடன் நீ இருந்தாய் !!
பேசிய நொடிகள் சில !!
பழகிய நொடிகள் சில !!
பெண்மை உன்னிடம் கண்டேன் !!
பெண்களில் நீ தனித்துவம்!!
புதிய பாதை அமைத்தேன் ,
புன்னகையுடன் செல்வோம் வா என் தோழியே !!-
உழவர்களின் அறுவடை திருநாள்...
நிலமும் நீரும் திளைக்கவே..
வயலும் வாழ்வும் செழிக்கவே...
உழவால் தொழில் மலர்ந்திடவே...
வறுமையும் வெறுமையும் நீங்கிடவே...
உழவர்களை வாழத்துவோம் வணங்குவோம்...
மகிழ்வித்து மகிழ்வோம்...
பொங்கலோ பொங்கல்!-
சிறு சிறு மலை துளியும்🌧️
சீறும் மண் வாசமும்🏔️
சிலிர்க்க வைக்கும் காற்றும்🌊
சிந்திக்க வைக்கும் மனமும்💬
சிந்திப்பவன் கவிச்சாரலில்
சிக்கியது மழைத் தூரல்☔-
யாரும் வேண்டாம் என்கிற எண்ணம் இறுதிச்சடங்கில் மிதிகள்படும் பூவின் அழுத்தத்தை மனதில் பதித்தாலும் பக்குவமெனும் புல்வெளியை படர விடுகையில் வலியும் சுகமாகவே தென்படுகிறது........
-