Thamilural Anusthikka   (தமிழூராள் அனுஷ்திக்கா)
1 Followers · 7 Following

ஈழத்துக்காரி

"எழுத்தே என் ஊழியம்
எழுதுகோலே அதன் ஆயுதம்"
Joined 23 January 2024


ஈழத்துக்காரி

"எழுத்தே என் ஊழியம்
எழுதுகோலே அதன் ஆயுதம்"
Joined 23 January 2024
24 APR AT 22:29

கல்வி என்பது
மகிழ்தலுக்கு உரியது
கற்பித்தல் மகிழ்தலை
ஏற்படுத்த வேண்டியது

மகிழ்வு இல்லாத எந்த விடையமும்
முழுமை பெறாது
கல்வியும் கூட...

-


23 APR AT 7:34

ஒரு மரத்தடி நிழல்
வாகன சத்தம் நுழையா சூழல்
என் மடியில் நீ
உன் தயவில் நான்

இது போதும்...

என் இனிய புத்தகமே📖❤️‍🩹

-


14 APR AT 0:50

இல்லாத நேரத்தில்
திடீரென ஆசிரியராகிறது
பணம்

-


14 APR AT 0:42

நான் குமராகிய பின்னும்
தொட்டிலில் ஆட்டுகிறாள்
அக்காள் 🤍

-


14 APR AT 0:36

ஓடித் திரியும் வயதில்
தொட்டில் ஆட்டுகிறது
ஊஞ்சல்

-


14 APR AT 0:31

பேருந்து நெரிசல்களில்
வெற்றி பெறுகின்றன
பாலியல் சுரண்டல்கள்

-


13 APR AT 20:47

இந்த வருடமும்
இன்பம் தங்கட்டும்
எங்கும் எதிலும்
நன்மையே நிறையட்டும்


இனிய புதுவருட நல்வாழ்த்துகள்

-


11 APR AT 11:15


வீதி சந்திப்பில்
சிறு புன்னகையாக
சுருங்கி விடுகிறது
நம் உறவு

-


10 APR AT 8:58

மகிழ்வும் அன்பின் பகிர்வும்
நம்மோடும் நம் உறவுகளிடமும்
நிலை நிற்பதாக

நிறைவான பெருநாள் நல்வாழ்த்துகள்

-


21 MAR AT 8:30

தம்பதியினர் நிலை கடந்து
குழந்தையால் பெருமை கொண்டு
பெற்றோராகும் நிலை போல
மனிதரில் கவிஞர்கள்

-


Fetching Thamilural Anusthikka Quotes