இளங்கதிரவன் ஒளியோடு
இன்பக்கதிர்களும் சேர
இனிதான ஒரு விடியல்
இந்த நாளை உயிரூட்ட
இனிய காலை வணக்கம்-
கற்பனையில் மட்டும் காதலன்.
புத்தம் புது காலைதனில்
புத்துயிர் பரவியெங்கும்
புது வசந்தம் பிறப்பெடுக்க
புதிதாய் ஒரு பயணம்
பாதை மாறிய அந்த
பகலவனின் பயணம் - இனி
படர்ந்த பனிபோல்
பட்டென்று உருகட்டும்
பட்ட துன்பங்கள் எல்லாம்
பிடித்து வைத்த குளிராய்
பிடறிபட ஓடட்டும் - நம்மை
பின்தொடரும் பிணியெல்லாம்
காரிருளாய் சூழ்ந்த
கண்ணீரும் கவலைகளும்
காணாமலே போகட்டும் - இனி
புதிய மொட்டுகளாய்
புன்னகை பூத்து பரவி
செழித்த பயிர்களாய்
செல்வங்கள் செழித்தோங்கி
இன்பங்கள் பொங்கி வர
இனிய பொங்கல் தின
வாழ்த்துக்கள்.......-
புல் நுனியில்
தூங்கும் பனியும்
அதை சேரும்
புதுமழை சாரலும்
வரவேற்கும்
புத்தம்புது காலை
நித்தம் விடிகிறது
கைபேசி திரையில்
உன் முகம் பார்த்து........-
முதல்முறை பிடிக்கிறது
கருப்பு இதயங்கள்
உனக்கு பிடித்த நிறம்
உன்னால் எனக்கும்....-
கானலில் மீன் பிடித்து
பாலையில் நீரெடுத்து
பற்றாத தீயிலே
பக்குவமாய் சமைத்து
கனவிலே அவள் ஊட்ட
நனவிலே பசியாறி
நெஞ்சுக்குள் வளர்த்து
கண்ணுக்குள் பூட்டியதை
வாய் பேச மறுக்கிறது
வழி மறந்த பிள்ளையாய்
மொழி மறந்த காதல்.....-
முற்று பெறாத வாக்கியம்
முதலாய் நான் இருக்க - அவளிடம்
முடித்து வைக்க தெரியவில்லை.....-
கண் மூடும் பொழுதுகளில் காட்சிப்பிழையாய்
கனவுகளில் மட்டும் மலரும் காந்தல் மலராய்
கண்களில் நீங்காத கண்ணின் மணியாய்
கலந்தவளே என் கண்ணம்மா -என்
காலைகள் தினமும் விடியுதடி
கண்திறக்கையில் உன் கைபிடிக்கும்
நாளை தேடி........-
முத்தமிடும் நிலவே! உன்
முத்திரைகள் இன்பம் தான்
இரு கன்னங்கள் தாண்டி அவை
இதழ் சேரவும் கூடுமோ?.....-
அறுபது பிள்ளை பெற்றாலும்
அகவை நூறு ஆனாலும்
என்றைக்கும் பேரழகி
என்னுயிர் ராட்சசி....-