புன்னகையுடன் பிறந்த
புது நம்பிக்கை பெண்!
இல்லறத்தை நல்லறம்
ஆக்கித் தந்தவள் பெண்!
வாழ்க்கை பாதையில்
பூக்களாகியவள் பெண்!
உலகத்தை அழகாக
உருவாக்கியவள் பெண்!
ஒருநாள் மட்டும் அல்ல
ஒவ்வொரு நாளும்
மகிழ்வுடன் கொண்டாடப்பட
வேண்டியவள் பெண்!
பெண்ணாக பிறந்தோம் என்று
பெருமைக் கொள்வோம்!
_ இரா. ஸ்ரீ தேவி
-
.Thank you for my followers
. Thank for the ones like my quotes.
Subscribe m... read more
தை மகளே வருகவே!
தைபொங்கல் நன்னாளில்
உன்னை ஊர் கூடி
மங்கலம் பொங்க!
மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்!
நலம் யாவும் சிறக்க!
செல்வ செழிப்பு நிறைய
எங்கள் இல்லம் யாவும்
இன்பம் பொங்க வருகவே!!
வருக! வருக! வருகவே!!!
_ இரா. ஸ்ரீதேவி
-
வார்த்தைகளால் .......
இதயத்தைக் கூறு போட்டபின்
சமாதானத்திற்கு என்ன வேலை?-
இரண்டையும் சமமாக
பழகிக் கொள்!
வெற்றியைக் கொண்டாடி
தீர்த்துவிடாதே!
தோல்வியைக் கண்டு
பயந்துவிடாதே!
_ இரா. ஸ்ரீ தேவி-
இனிப்பான இன்பங்கள் நிறைந்து!
மகிழ்ச்சியுடன் நலமும் வளமும்
பெருகிட !அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
_ இரா. ஸ்ரீ தேவி-
இதயத்தின் துடிப்புகளை
உன் விழிகள் அழகாய்
மொழிபெயர்ப்பு செய்துவிட்டது!
என்னை அறியாமல்
உதடுகள் ஏதோ உளருகிறது !
உணர்வுகள் ஏனோ தடுமாகிறது!
நீளும் இரவுகளில்
உன் நினைவுகளில் கரைந்தே !
என் கன்னம் தொடும்
கண்ணீரில் நனைந்தே!
காணாமல் போகிறேன் நான்!
என்று ஆறுமோ?
உன் கண்பட்ட காயம்!!!
-
என் அழகு கண்ணனே!
உன் மைவிழியோரம்
என் மனம் மயங்குதே!
உன் கொஞ்சும் இதழோரம்
என் மதி மயங்குதே!
உன் அருட் பார்வை
என் மீது வீசக்கூடாதா!
பேதையானேன் நான்!!!
_ இரா. ஸ்ரீ தேவி-
ஆயிரம் சூரியன் போல
எனதருகில் நீ இருந்தால்
என் துன்பம் எல்லாம்
பனி போல் விலகிடுமே!
என் இரவுகள் யாவும்
நீ தந்த தன்னம்பிக்கை
சுடரால் ஒளிர்திடுமே!
என் மனம் எங்கும்
எத்தனை எத்தனை பிம்பம்
அத்தனையும் உன் முகம்
அம்மா! அம்மா! அம்மா!
_ இரா. ஸ்ரீ தேவி
_-
உழைக்க தெரிந்தவன் ஒருநாளும்
சோர்ந்து போவதில்லை!
உழைப்பு ஒருநாளும் வீண்போவதில்லை!
உழைப்பின்றி உயர்வும் இல்லை!
உன் பலம் உனக்கு
தெரிய வேண்டும் என்றால்
உழைக்க பழகி கொள்!
கடின உழைப்பு கல்லையும்
கற்கண்டாக மாற்றும்!!!
_ இரா. ஸ்ரீ தேவி
-