வழிமாறி சென்ற இந்த
வழிப்போக்கன் வாழ்வில் வந்த
திசைகாட்டி இவளே..!✨
இனி நான் காணும்
காட்சி எல்லாம் அவள் மட்டுமே..!💙-
பேச்சு துணைக்கு யாருமில்லை என்பது
சாபமா வரமா என்ற கேள்வியிற்கு விடை அவன் விட்டு சென்ற பின் தான் தெரிந்தது!😊💯-
"என்னை எதனால் உனக்கு பிடித்தது"
என்று அவன் கேட்டான்👀
.
"என்னை எனக்கே பிடிக்க வைத்தமையால்"
என்று நான் சொன்னேன்🙈-
"சேலை கட்டி வந்த சிண்ட்ரெல்லா இந்த பாவையின் பார்வை என்ன மின்னலா" என்று அந்த கம்பனும் இவளை கண்டிருந்தால் நவீன ஹைக்கூ சொல்லியிருப்பான்✨
-
மாசி மாதத்தின் 28ம் 29ம் திகதிகளை போலத்தான் எனக்கும் அவனுக்கும்
இடையே இருக்கும் தொடர்பு!💯
.
அத்தனை நெருக்கமாய் இருந்தும்
அவனிற்கும் எனக்குமிடையில் ஏனோ தொலைதூர இடைவெளி மட்டுமே மிச்சம்!💔-
அவள் ஏற்ற இறக்கங்கள் கண்டு
என்னில் மாற்றங்கள் உருவானது🙊
.
அவள் பச்சை தாவணி மறைக்காத மிச்சம்
அழகின் உச்சம் என மனம் நினைத்து கொண்டது👻
.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மேலேறி செல்ல
வியர்வையில் உடல் நனைகிறது🙈
.
அவள் காலடியில் கொட்டி கிடக்கும் வாசத்தில் வாழ்க்கை செல்ல மனம் வேண்டி கொள்கிறது💯
.
மலைத்தொடரும் நானும்💕-
என் சந்தர்ப்பங்களை புரிந்து கொள்
என்றாள்👀
சரி நானே விலகிக்கொள்கிறேன்
என்றேன்🥺-
பேசினால் முடிவுக்கு வராத
பிரச்சனை என்றெல்லாம் ஒன்று இல்லை..!💯
.
இங்கே பிரச்சனையே
அவன் சரியாக பேசாதது தான்..!🥺-
நிலவிற்கும் பூமியிற்கும் இடையில் உள்ள தொடர்பு தான் அவளுக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு..!💯✨
-
ஒரு சில வினாடிகள் தான்!
இருந்தும் ஓராயிரம் எண்ணங்கள்
உள்ளுக்குள் ஓடி விட்டது;
அவன் கடைவிழிப்பார்வை என் மீது
படர்ந்த போது!💕✨-