Tamil Isai   (Tamil Isai)
58 Followers · 27 Following

Joined 5 April 2018


Joined 5 April 2018
11 JUL 2020 AT 18:50

என்னவனை

காலமெல்லாம் காத்திருக்கிறேன் என்னவனுக்காக

வருடங்கள் கழிந்தாலும் வாழ்க்கைமுறை மாறினாலும் உன்னை மறக்காது என் இதயம்!!!

-


14 JUN 2020 AT 19:29

வாழ்க்கை மாறி விடுகிறது

சுகம் மற்றும் துக்கம்
இன்பம் மற்றும் துன்பம்
சிரிப்பு மற்றும் அழுகை
நல்லவை மற்றும் கெட்டவை

அனைத்திலும் உற்ற துணையாக
உன்னுடன் வாழ்க்கை முழுவதும்
பயணிக்க விழைகிறேன்

-


14 JUN 2020 AT 12:41

என்னவள் வார்தைகள் மட்டும்
எந்தன் நினைவுகளாய்

உன்னை மட்டுமே
எண்ணும் காதலாய்
கைகளை கோர்த்து
செல்லும் காதலனாய்

விழிகள் மௌனமொழி பேச
காலம் முழுவதும் உந்தன்
காதல் கணவனாய் வாழ
ஆசையடி!!!

-


14 JUN 2020 AT 12:31

என்னவளுடன் இல்லாத நான்

இரண்டுமே அழகையும்
தனித்துவத்தையும் இழந்து
தானே வாடுகின்றன

-


14 JUN 2020 AT 12:24

எப்பொழுது உன்னிடமிருந்து
அலைபேசியில் இருந்து
அழைப்பு வருவது

எனது எண்ணங்களை உன்
செவிவழி நுழைத்து இதயம்
வரை எடுத்து செல்வது

-


12 JUN 2020 AT 11:08

உந்தன் கடைக்கண் பார்வையில்
மொட்டுக்கள் பூக்களாக மாறும்

உந்தன் ஸ்பரிசம் கிடைத்தால்
முட்கள் பூவாக மலரும்

-


9 JUN 2020 AT 22:55

காற்றில் பறந்து செல்லும் நான்

இயற்கை அன்னை படை சூழ
காதல் என்னும் சத்தியத்தை
கையில் ஏந்தி என்னவனை
தேடி செல்லும் நான்

-


7 JUN 2020 AT 13:39

நான் உறைந்து போனேனடி

உன் ஒரு விழி பார்வையில்
என்னை சாய்த்து விட்டதடி

காலம் முழுவதும் உன் காதலனாய்
வாழ வரம் கொடடி

என் விழிகளில் நுழைந்த
உன்னை என் நெஞ்சத்தில்
சுமந்து ஆயுள் முழுவதும் காப்பேனடி!!

-


6 JUN 2020 AT 8:02

உன் வதனம்
காண ஏங்கினேன்

நீ என் அருகில்
இருக்க விழைந்தேன்

இருள் சூழ்ந்துள்ள வேளையில்
நீயே எந்தன் பாதுகாப்பு நம்பிக்கை
என்னை எப்பொழுதும் தனித்து
இருளில் விடாதே அம்மா

-


5 JUN 2020 AT 19:47

சிலையாகிய நான்

உலகம் இந்த நொடியில்
உறைந்தால் தான் என்ன?

என் இன்னுயிரை நான்
இழந்தால் தான் என்ன?

என்னவன் இல்லாதா உலகத்தில்
நானும் மறைந்தால் தான் என்ன ?

என்னவன் நான் மறைவதை
ஏற்க மாட்டான்

என்னவனுடைய விருப்பம் நான்
வாழ்வதாதலால் இன்னுயிரை
என்னுடன் வைத்திருக்கும் நான்

-


Fetching Tamil Isai Quotes