கனாக்காண துவங்கிடும் பேனாவும்!
-
வாடகை:
நிறத்தால், மொழியால், இனத்தால், பணத்தால்,
சக மனிதனை பிரிக்கும் மதத்தால் -
மேல்கீழ் நோக்கும் மானிடப் பிறவியே,
இவ்வாழ்க்கை அமைவது ஒரு முறையே!
நிரந்தரமில்லா இதில் இருப்பிடமாய் இவ்வுலகம்!
மறந்துவிடாதே யிங்கு வாடகை யுண்டு -
நின் னொவ் வொரு வினைக்கும்!-
நிலைக் கண்ணாடி போல்
எதிர் நிற்பவர் தோல்
சாயம் பூசி விடு -
கண் மணி வீச்சினிலே!-
கண் விழிக்கும் நேரத்தில்,
நின் பிம்பமே முன்னில்
வந்து, கண்சிமிட்டும் நொடியில்
மறைந்து, எண்ணத்தின் பிடியில்
சிக்கி கொண்டு - மண்ணில்
நும் விழுந்த நாள்முதல்,
தினம் உம் மடியில்
எழ முயல்கிறேனே! அருகில்
இருப்பீரோ எனும் தவிப்பில் -
உடைகிறேனே நீர் இல்லாமல்!
தடுகின்றதே இப்பிஞ்சு முகங்கள்,
உம் அருகில்வர நினைக்கையில்!-
நேர்மையின்மையின் விளைவு:
“நேரில்லா வாழ்க்கை அது அடித்
தளமில்லா மாடத் தொப்பு.”-
ஆச்சிரியக் குறி:
இன்று என் ஆற்றல் கேள்வி குறியில்,
அதற்குள் என்னை மதிப்பிட்டு விடாதே!
நாளை அது ஆச்சிரிய குறியில்,
மாறிய பின்னுன் மதிப்பிற்கு முற்றுபுள்ளியே!-
பாக்கியம்;
கருந் தோல் போர்த்திய -
வெண் நிறனே! தூயவனே!
உன் அன்பின் எல்லையின்
சாவியால் என்னுள் பூட்டினாய்!
உன் இதயம்துடிக் கும்மோசையில் -
வாழ்வின் இன்பத்தை வழிகாட்டினாய்!
உம்தாயின் பாக்கியம் கிடைக்குமோ?
மறுப்பிறவியில் உன்னை சுமக்க!-
புரிதல் இருந்தால் போதும்
இரவோடு இரவாக கலைந்து
உயிரோடு உறவாக அணைக்கும்!
-
பாடி பறந்த கிளி,
தேவ னடி சேர்ந்ததடி!
மண்ணில் இன்றிவ ரன்றி,
இசையே சுவாசிப்ப தெவரடி?
ஒரு பாட்டாலே சொல்லி,
மனதை எடுத்தவர் அள்ளி!
இன்னிசை பாடி வரும்
இளந்தென்றலுக் குருவே SPB!
-