18 APR 2023 AT 0:36
கோடை வெயிலில்
கொன்றை மரத்தடியில்
நின்றிருந்த நீ
தாங்கி நிற்கும்
வண்ணத்தை
எதிலிருந்து
பெற்றாய்?
-
7 APR 2023 AT 23:15
தித்திப்பு
என்பதன் பொருள்
சுவையாக இருக்கலாம்
மணமாக இருக்கலாம்
உன் பெயராகவும்
இருக்கலாம்-
17 APR 2023 AT 22:43
இளைப்பாறிக்
கொண்டிருந்தாலும்
மனதில்
படிந்திருப்பது
என்னவோ
பகலின் வெயில் தான்!-
11 MAR 2023 AT 12:52
சாவி இருக்கும் போதும்
சில பூட்டுகள்
திறக்கப்படுவதில்லை!
சாவி கனமா
பூட்டு கனமா
என்ற கேள்விளூடே
கனத்திருப்பது
திறப்பவர் மனது!-