QUOTES ON #மதியின்கதிர்

#மதியின்கதிர் quotes

Trending | Latest
17 FEB 2019 AT 20:33

நீ அழும் போது
அன்னையாக...
உன் தவறை திருத்தும்போது
தந்தையாக..
நீ தோள் சாயும்போது
தோழனாக..
நீ கண்மூடும் வரை
உந்தன் கணவனாக இருக்க
எனக்கும் ஆசை தானடி...

-


8 NOV 2019 AT 14:22

என்னவளே..
வலி என கூறி
நீ துடித்திடும் போது..
ஆறுதல் சொல்லுவதற்கு முன்பே..
அழுது முடித்திருக்குமடி
என் கண்கள்...

-


31 JAN 2019 AT 8:10

மணலினை எண்ணி
மனதில் வைத்து கொள்..
நீர்துளிகளின் எண்ணிக்கையை
அதனோடு சேர்த்துகொள்..
காற்றின் அசைவையெல்லாம்
கணக்கெடுத்து வைத்துக்கொள்..
இதயதுடிப்பினையும்
இதனோடு சேர்த்துகொள்..
இவை எல்லாவற்றோடும்
உன் அழகினை பெருக்கிகொள்..
.
உன் மீதான
என் காதலின்
விடை இதுதான்
தெரிந்துகொள்...

-


17 NOV 2019 AT 22:14

முத்துப்பல் கொண்டு
முத்தம் ஒன்றை
பதிக்கின்றாள்
கழுத்தின் மீதிலே
மெதுவாக கடித்தபடி..
காதலை வெளிப்படுத்த
இதுவும் ஒரு முறையாம்...

-


2 MAR 2019 AT 16:53

நித்தமும் உன் அழகால்
நீ என்னுள்
கவிதை போர் தொடுக்க..
வார்த்தைகளால்
வெல்ல நினைத்தால்
காப்பியமாக மாறிவிடும்..
எனவேதான்
தொடர்ந்து தோற்கிறேன்
உன்னிடத்தில்...

-


25 FEB 2019 AT 22:07

உயிராகிய ஒளியை
நிலவாகிய
உன்னிடம் கொடுத்து
ஏதோ ஓர் மூலையில்
உன் நினைவுகளால்
எரிந்து கொண்டிருக்கும்
கதிரவனாய் நான்...

-


26 JAN 2019 AT 10:51

எப்போதும் உனதருகில்
எப்போதாவது உன்
இதழ் அருகில்..
இடைவெளியே இல்லாமல்
இருவரும் வாழ வேண்டும்
.
இதை தவிர எனக்கு
வேறு என்ன
சுகம் வேண்டும்...

-


5 NOV 2019 AT 12:28

அழகாக உள்ளது
என கூறிதான்..
அணிகலன்களை
அவளுக்கென
வாங்கி வருகிறேன்
என்றபோதும்..
அவள் அணிந்த பின்புதான்
அவைகள் அழகென்றே
நான் ஒப்பு கொள்கிறேன்...

-


28 OCT 2019 AT 22:55

முடியவே முடியாதென
நான் மறுக்கும்
செயல் என்றபோதும்...
மாமா என கூறி
சிணுங்கல் மொழியில்
சிறுகுழந்தைபோல்
நீ அடம்பிடிக்கும் போது..
அடங்கித்தான் போகிறேனடி
அத்தனை கர்வமும் துறந்து...

-


23 JUN 2019 AT 10:52

எந்தன் விரலால்
உந்தன் உடலில்
நான் வரையும்
ஓவியத்திற்கு..
வெட்கத்தால்
வண்ணம் பூசி மேலும்
அழகாக்குகிறாயடி
என்னவளே...

-