கவிதைகள் மீதொரு
கோபம் எனக்கு!?!
(ஆதலால் சில கேள்விகள்)
(👇✍️👇)-
26 MAY 2021 AT 9:29
ஊரடங்கு தளர்வில்
அலைமோதியது
கடைகளில் கூட்டம்
"கம்மல பாத்துட்டு
காசுகொடு சேட்டு
கடை மூடறதுக்குள்ள
பொருளை வாங்கனும்"
அலைமோதிய
கடைகளில்
அடகு கடையும் ஒன்று!-
27 JUN 2021 AT 19:19
காலணி அறுந்த போது
சாலையோர
நடைபாதையில்
தெய்வம் போல
தெரிகிறார்
காலணி தைக்கும்
கலைஞர்...!
தைத்து முடித்த பிறகு
மனிதராகிவிடுகிறார்
பேரம் பேசத்
துவங்குகிறோம்!-
9 OCT 2020 AT 9:20
சிக்னல் சரியாக
கிடைக்காத கிராமத்தில்
படிப்பதற்காக
டவுன்லோட் செய்வதற்கு
பனை மரம் ஏறினார்
எழுதப் படிக்கத் தெரியாத
அப்பா...!-
16 MAR 2021 AT 7:38
கவிதை எழுதி
பிடிக்கவில்லை என
கசக்கி எறிந்த
காகிதத்தை எடுத்து
பிரித்துப் பாருங்கள்
செதில் செதிலாக
வெடித்து போன
அந்த காகிதத்திற்கு
எழுதிய வரிகள் ஆறுதல்
சொல்லிக் கொண்டு
இருந்திருக்கலாம்..!-