QUOTES ON #போர்க்களத்துப்பூ

#போர்க்களத்துப்பூ quotes

Trending | Latest
29 AUG 2019 AT 23:53

பொதிகை மலையில் பிறந்தவளோ...
பொன்னும் மணியும் பூண்டவளோ...
காவேரி நதியில் நனைந்தவளோ...
கார்க்குழல் அள்ளி முடிந்தவளோ...
காட்டாற்று வெள்ளம் கடந்து
கார்மேகத்தை வென்றவளோ...

-


29 MAY 2019 AT 20:36

செவி கேளா மேகமும்
விழி தெரியா வானமும்
வழியில்லாமல் நாமும்...

(Caption இல் தொடரவும்)

-


27 FEB 2019 AT 20:40

உலகின் அத்தனை முதல்தர நட்சத்திர உணவகங்களும் வெட்கிதலைகுனிகின்றன...
உடலை உணவகமாக்கி
உதிரத்தை உணவாக்கி
உன் உயிர் காத்த அந்த
உண்மையான விருந்தோம்பலின் முன்னே...

#அம்மா...

-


15 JAN 2019 AT 0:04

உங்கள் அன்பில்
பூத்த போர்க்களத்துப்பூவின்
உழவர் திருநாள்
நல் வாழ்த்துக்கள்...

-


22 MAR 2019 AT 19:54

உன் முகம் காணா நாள் ஒன்று இங்கில்லை கண்ணே...
உன் நிழல் வீணாய் விழியோடு வழிந்தோடும்
மணியே...
உன் இலம் கண்டு நரம்போடு உயிராடும்
பனியே...
உன் துகில் உறித்த மனிதத்தை மன்னிப்பாயோ
இறையே...

-


30 JUN 2019 AT 19:32

ஐங்குரவர் பொற்பாதம் பணிய
கலைக்களஞ்சியமே கைகூட
புருடார்த்தம் எண்ணியெண்ணி
ஐம்பூதமாய் மறைவதேனோ???

-


30 JUN 2019 AT 16:17

படபடப்பில்லா ஞாயிறு மாலை
அமைதித் தென்றல் வருட
வெகு நாட்களின் பின்
தாய் மடி மீது நான் உறங்க
அவர் என் தலைக்கோத
தேவையானது தெரியாதது என
சிறு கதைகள் பேசும்
இந்த நொடி நகராமல் நின்றாலென்ன???

-


30 JUN 2019 AT 14:32

உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
என் இதயத்தை தைக்கின்றன
கடிகாரமுட்கள்...

-


9 AUG 2019 AT 13:12

நமக்கெதுக்கு வம்பு???
இருக்க இடம் தெரியாம இருந்துட்டு
போய்டுவோம்!!!
😂🙈😂

-


24 FEB 2019 AT 16:24

இன்னுமொரு நம்மாழ்வாராக
பிறக்க வேண்டும்!!!
வானகம் என வையகத்தை
மாற்ற வேண்டும்!!!

-