QUOTES ON #பிறைசூடி

#பிறைசூடி quotes

Trending | Latest
24 APR 2021 AT 11:45

திருமணம் என்பது வன் சிறையாகாமல்
நறுமணம் வீசும் நன்மலர்ப் பூங்காவாகட்டும்

_ பிறைசூடி

-


29 MAR 2021 AT 20:01

என்று தெரிந்து கொண்டேன்
ஒரு வார அமைதிக்குப் பின்
வராத குறுஞ் செய்தியாலும்
சுற்றிவரும் வதந்தியாலும்

_ பிறைசூடி

-


29 OCT 2020 AT 11:44

கூடி வாழ்வதே குடும்பம்
ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும்
ஒரு நாள் கிழமை என்றால்
ஏற்று சேர்வது உறவு

-


5 MAY 2021 AT 9:11

நாலாயிரம் கோடி மேகங்கள்
வெள்ளிச் சரிகை உடுத்தி
களிப்புடன் உலா வர
தென்றல் தன் வாசத்துடன்
என்னைத் தழுவியவாறு
பாறை விளிம்பில் இச்சையுடன்
அருகமர்ந்து என் அச்சம் நீக்கி
விரிபடக் கூறியதெனக்கு
"பார் இப்பார் உன் கையடக்கம்"

_ பிறைசூடி

-


26 SEP 2020 AT 11:26

அன்பு, நம்பிக்கை
என்ற இரண்டு தூண்கள்
மேல் தாங்கப்படுகிறது

-


27 SEP 2020 AT 18:26

மலர்கள் சிரிப்பது ஒரே ஒரு பகற்பொழுது
மலர வைத்த பகலவனிடம் காதல்
மலர்ந்த இன் முகத்துடன் அவனைத் தொடர்ந்து
மாலையில் மறையுமுன் வணங்கி நிற்கும்

-


4 APR 2021 AT 19:14

மணமில்லை
உறவில்லை
வண்ணம் பூசி
கொண்டவர் மகிழ
புன்னகை அணிந்த
காகிதப் பூக்கள்

_ பிறைசூடி

-


22 MAR 2021 AT 21:10

தாம் தித்தாம் தை தத்தை
தைத்திட்டதாம் இத் தத்தை
தன் மனதை காதல் வித்தை
புன்னகையால் மறைத்திட்டதை
அவன் கண்டு நகைத்திட்டதை
ரசிப்போம் ஆடல் நாடகத்தை

_ பிறைசூடி

-


4 NOV 2020 AT 21:23

எல்லாம் நடந்துவிட்டால்
சொந்த பந்தங்கள்
எங்கிருந்தோ வந்து சேரும்
தடைகளில் உழல்பவனுக்கு
சொந்த மக்களும்
சொல்லாமல் நீங்கக்கூடும்

_பிறைசூடி

-


16 OCT 2020 AT 10:59

தருவாய் ஒரு வரம். உலகில்
இருக்கும் மாந்தர் மனதில்
அருள் கூர்ந்து அன்பைப்பெய்

-