QUOTES ON #நற்றினை_கனா

#நற்றினை_கனா quotes

Trending | Latest
19 JUL 2021 AT 8:33

"பொருளீட்ட நான் உன்னை பிரிந்த
பழைய வலிகளே பட்டுப் போகவில்லை
திரும்ப அதை நிகழ்த்திப் பார்க்கவோ
எண்ணும் மனதிற்கு ஆறுதலே இல்லை"

-


26 JUL 2021 AT 23:56

தலைவனே!

ரகசிய சந்திப்புகள் ரகசியமாகவே
இனி இராது
ஊரறிந்து உரக்க சொல்லி பழிக்கத்
துவங்கி விடும்
அன்னை அறிந்தால் அன்பனோடு
கலப்பது கடினம்
அழைத்துச் செல் அவளை உந்தன்
காதல் தேசத்திற்கு!

இப்படிக்கு
தோழி

-


3 MAY 2021 AT 23:46

நற்றினை- பா 1- பொருள் கவிதை
============================

நீரின்றி அமையாது இவ் உலகு!
நீயின்றி அரும்பாது என் உசுரு!

வேரின்றி படராது பசுமை!
காதலின்றி படருமே பசலை!

பிரிவு நம்மைப் பார்த்து சிரித்தால் சிறுமை!
உறவால் நாம் பிணைந்தால் அதுவே பெருமை!

-


5 MAY 2021 AT 22:31

நற்றினை - பாடல் 2
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
வீட்டை விட்டு வெளியேறும்
காதலர் செல்லும்
சாலையதுவோ கொலை வெறியோடு
கடந்து செல்லும் காதலர் நெஞ்சமோ
கடலை விஞ்சும் காதல் வெறியோடு!

-