"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
சாலை வழி செல்லுகையில்
முள்ளொன்று தாக்கி
காலில் குருதி பெருக்கெடுத்தது
அதை கண்ட நானோ வலியால்
விதியை நொந்து பழிக்க
திடீரென நடைப்பாதையில்
சென்ற ஒருவன் மீது
பைக் மோதி அவன் காலிழக்க
என் வலியோ பறந்து சென்றது
எனது பொறுமையில்லா தன்மையோ
என்னை தலை குனியச் செய்தது ..-
இரு கண்கள் கண்ட காதல்
கல்லறையினுள் புதைந்தது...!
கல்லறையை தேடாதே...,
அது உன் கண் இமையினுள் தொலைந்தது..!
#புதைந்த_காதல்...!
#தமிழ்ச்சரம்
@pk-
அகராதியில் புலப்படாத
அர்த்தத்தை முகபாவனை
வெளிக்கொணர...
தேவருலக தோட்டத்தில்
விளையாத திராட்சைகள்
கண்ணுள் உருண்டோட...
கையில் நழுவிச்செல்லும்
மீன்போன்ற இடை,
வளைந்து நெளிந்தாட...
காற்றை சுழற்றடிட்டு
விரல்கள் யாவும் கோலமிட...
துள்ளி தவழும் மீனாய்
கால்கள் துள்ளியாட...
அவள் நடன அசைவிக்கேற்ப
கால் சலங்கை இசைபாடும்!
#கோதைச்சதிர்
#தமிழ்ச்சரம்-
அமைதி நிறைந்த இரவை தேடி,
அழகு பொருந்திய நிலவின் வருகையை...
விடியல் பொழுதில் மறையசெய்வது
சேவல் கூவும் ஓசையே என்பார்...
உண்மை யாதெனில்,
விடிவெள்ளிப்போல் சிவந்த
என்னவள் காலடி கொலுசுமணி
ஒலிக்கும் ஓசையே என்று அறிந்தவர்
யாரோ?
#அவளின்_ஓசை!!!
#தமிழ்ச்சரம்-
பேராசையின் மீது மோகம் கொண்டு,
கடல் அலையாய் ஆர்ப்பரிக்கும் மனமும்...
காலப்போக்கில் நிம்மதி ஆகிய
ஆழ்கடலை நாடவே விரும்பும்...
#தமிழ்ச்சரம்-
எண்ணங்களின்
வெளிப்பாடே
செயலாகிறது.
ஒருவரது செயலை
கொண்டே,
அவரது வாழ்வில்
வளர்ச்சியும்
தாழ்ச்சியும்
நிர்ணயிக்கபடுகிறது...-
காயம் கண்ட உள்ளத்தில்
கல் எரிந்து போனாய்...,
காயம் கூட மறையலாம்,
கல் நெஞ்சம் கரையுமோ...?
கண் கலங்காது கலங்குகிறேன் என் காயத்திற்கு மருந்தே,
உன் காதலே...!
#தமிழ்ச்சரம்-
புறாக்கள் கூட்டம் போல்,
கூட்டத்தில் ஒருவனாக இராது...
தனிமை ராஜ்ஜியம் செய்யும்,
கழுகை போல் பறக்கத் துடிக்கிறதே,
மனம்!!!
#என்_தனி_உலகம்...!
#தமிழ்ச்சரம்-