பகுத்தறிவை பகுத்தறிந்தது ஐந்தறிவு
இரங்கிடும் இதயத்தின் கருணையை காட்டிலும்
கேட்டிட அறிந்திடா கேண்மையை அறிந்திட்ட
அன்பே பெரிதென அதுவே இறையென...!-
6 JUN 2021 AT 12:02
12 JUN 2021 AT 19:48
மெய் என்று பொய் சொல்வார் பொய்களை
பொய்யானவர் மெய் என்று பொய் சொல்வார்
மெய்யானவர் பொய் என்று மெய் சொல்வார்
பொய் என்று சொன்னது பொய்யல்ல மெய்யென்று
அவனோடு அவனான இவனன்றி யாரறிவார்...!?-
27 APR 2021 AT 22:57
அருளிற்கு அனுமதி வழங்கிட
கலியிற்கும் தகுதிகள் ஏதடா?
சுதந்திரம் பெற்றுமே
தியாகியர் வாழ்தலால்
உளம் குளிர்ந்தேனே
உயிர் சிலிர்த்தேனே
அவரவர் விதியினை
அகற்றிடும் அருளறிந்தோர்
கலங்கிட மறுப்பீர்
கதியென சரணாகதியுற்றோர்
துணையென எண்ணிடின்
துயரில்லை துடிக்காதீர்...!-