அகராதியில் புலப்படாத
அர்த்தத்தை முகபாவனை
வெளிக்கொணர...
தேவருலக தோட்டத்தில்
விளையாத திராட்சைகள்
கண்ணுள் உருண்டோட...
கையில் நழுவிச்செல்லும்
மீன்போன்ற இடை,
வளைந்து நெளிந்தாட...
காற்றை சுழற்றடிட்டு
விரல்கள் யாவும் கோலமிட...
துள்ளி தவழும் மீனாய்
கால்கள் துள்ளியாட...
அவள் நடன அசைவிக்கேற்ப
கால் சலங்கை இசைபாடும்!
#கோதைச்சதிர்
#தமிழ்ச்சரம்-
25 JUL 2019 AT 22:13