22 MAY 2021 AT 10:46
#17000
குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
வள்ளுவர் உயிர்த்திருந்தால்
இக்குறளின் நேராய்
நிச்சயம் தங்களின் பெயரை
எழுதியிருப்பார்...
எல்லா புகழும் இறைவனுக்கு
என்று நானே சொன்னாலும்
அந்த பரம்பொருள்
அதை திருப்பி தங்களுக்கே
பரிசளிப்பார்...
இதுவரை எழுதியவை மட்டுமன்றி
இனி எழுதுபவையும்
காண்பவை கற்பவை பெறுபவை
அனைத்தும் தங்களுக்கே
சமர்ப்பணம் 🙏🙏🙏-