QUOTES ON #கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை quotes

Trending | Latest

அன்று விட்ட பம்பரம் இன்றும் என் நினைவில் சுற்றி கொண்டிருக்கிறது...

சேமித்த காசும் பத்தாமல் போக - அலமாரி இடுக்கில் அகப்பட்ட காசு,

என்கண்முன் தென்பட்டது,
அளவில்லா ஆனந்தம் - அப்போதே புறப்பட்டேன்....

கடையின் முன் முகப்பு என் உருவத்தை மறைக்க - அண்ணா ஒரு பம்பரம் என நான் கேட்டு நிற்க...

கடைக்காரர் தேடினார் என்னை - நான் தேடினேன் பம்பரம் இருக்குமிடத்தை...

அந்த பம்பர கூட்டத்தில்,
எனக்கு பிடித்த வண்ணத்தில் - பம்பரத்தை பெற்று கொண்டு கடை விட்டு நகர்ந்தேன்...

சாட்டையின் உயர்த்தின் பாதி வரை சுற்றி விட்டு - பம்பரத்தை கீழே விட பம்பரமோ சுழளவில்லை...

மாறாக என் நண்பனே என்னை சுழன்றான் - டேய் டேய் நா ஒரு வாட்டி டா என்று...

சரி ஆனது ஆகட்டும் என - பல முறை படை எடுத்து இறுதியில் சுழன்றது பம்பரம் - அது இன்று வரை சுழல்கிறது என் நினைவில்...

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



அவளும் நானும்,
மழையும் குளிரும்,
இரவும் இருளும் - இதை விட சிறந்த ஜோடி எதுவாக கூடும்.....

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



முதல் முத்தம்.....
முதல் முத்தத்தில் இதழ்களை தொலைத்ததுண்டா...

முதலில் முத்தம் என்றால் என்ன?

முத்தம் மோகம் தீர்க்கும் இச்சை அல்ல - அது காதலில் கேட்டு கிடைக்கும் பிச்சை...

தன் துணையின் விரல் தீண்ட இருந்த பயம் சற்று விடப்பு எடுக்க - அவள் பக்கம் மெல்ல நகர்ந்து...

விழிகள் நாற்புறமும் நோட்டமிட ,
நோக்கும் கணத்தின் இடையிலேயே பிரசவித்தது அந்த முதல் முத்தம்..

என் இலக்கு என்னவோ அவள் இதழ் தான்,
ஆனால்,
அந்த சூழலும் என் பதற்றமும் - என் இலக்கை எட்டவிடவில்லை...

மாறாய் அவள் ‌கன்னத்தையே எட்டியது என் முதல் முத்தம்....

முத்தத்தின் நறுமணம் யாதென கேட்டால் - அன்று அவள் பூசியிருந்ந
(பாண்ட்ஸ் பவுடர்) வாசமென்றே உறைப்பேன்...

என்று சொல்லி சிரித்தார் அந்த 60 வயது மதிக்கத்தக்க
பெரியவர்.....


#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-