பாலாஜி மில்கி   (I_Balajimilky)
112 Followers · 107 Following


தனக்கு நடந்தா வலிக்குது ,
பிறர்க்கு நடந்தா சிரிக்குது,
என்ன ஒரு கொடூர மனநிலை....

-



தோழி அவள்‌ கண் கலங்க - தோழனாக
தோற்று போனேன்...

நண்பி அவள் மனம் வருந்த - காரணமும்
நான் ஆனேன்...

வாய் கொழுப்பில் வந்த வார்த்தை - காயம்
செய்து போனதோ...

அக்காயம் போக்கும் மருந்தாக - நம் நட்பும்
இங்கு மாறுதோ...

மாற்றம் ஒன்றே மாறாதது - மறந்து
விடு தோழியே...

மீண்டும் இது போல் நிகழாது - என்னை
மன்னி நண்பியே...!


Sry .......

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை....

-



முதல் முத்தம்.....
முதல் முத்தத்தில் இதழ்களை தொலைத்ததுண்டா...

முதலில் முத்தம் என்றால் என்ன?

முத்தம் மோகம் தீர்க்கும் இச்சை அல்ல - அது காதலில் கேட்டு கிடைக்கும் பிச்சை...

தன் துணையின் விரல் தீண்ட இருந்த பயம் சற்று விடப்பு எடுக்க - அவள் பக்கம் மெல்ல நகர்ந்து...

விழிகள் நாற்புறமும் நோட்டமிட ,
நோக்கும் கணத்தின் இடையிலேயே பிரசவித்தது அந்த முதல் முத்தம்..

என் இலக்கு என்னவோ அவள் இதழ் தான்,
ஆனால்,
அந்த சூழலும் என் பதற்றமும் - என் இலக்கை எட்டவிடவில்லை...

மாறாய் அவள் ‌கன்னத்தையே எட்டியது என் முதல் முத்தம்....

முத்தத்தின் நறுமணம் யாதென கேட்டால் - அன்று அவள் பூசியிருந்ந
(பாண்ட்ஸ் பவுடர்) வாசமென்றே உறைப்பேன்...

என்று சொல்லி சிரித்தார் அந்த 60 வயது மதிக்கத்தக்க
பெரியவர்.....


#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



கீழே இருந்தால்,
தன்னை அகற்றி விடுவார்களோ
என்ற அச்சத்தால் - கிடைக்கும்
உயரமான இடங்களை எல்லாம்,
தனது இருப்பிடமாய்
மாற்றி கொள்கிறது இந்த கொடிகள்....

இடம் : அரசர்
மேல்நிலைப்பள்ளி (தஞ்சை)

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



ஆணோ!
பெண்னோ!
கருப்போ!
சிவப்போ!

உன் அழகு முகத்தை கண்டிடவே, என் நெஞ்சம் ஆசை கொண்டிடுதே...

வஞ்சம் இல்லா உன் அன்பில்,
தஞ்சம் கொள்ள ஏங்கிடுதே...

கஞ்சம் இல்லா உன் சிரிப்பில் எம்மை கொள்ளை கொள்வாயா...

உன் பிஞ்சு விரலை பிடித்துக் கொண்டு - இப்பிரபஞ்சம் மொத்தம் வலம்வருவேன்...

நின் ஆசை யாவும் நிறைவேற்றி - உன் சித்தி நானும் மகிழ்ந்திடுவேன்....

#ஆவளோடு_உன்_வருகையை_என்னி...

-



அன்று விட்ட பம்பரம் இன்றும் என் நினைவில் சுற்றி கொண்டிருக்கிறது...

சேமித்த காசும் பத்தாமல் போக - அலமாரி இடுக்கில் அகப்பட்ட காசு,

என்கண்முன் தென்பட்டது,
அளவில்லா ஆனந்தம் - அப்போதே புறப்பட்டேன்....

கடையின் முன் முகப்பு என் உருவத்தை மறைக்க - அண்ணா ஒரு பம்பரம் என நான் கேட்டு நிற்க...

கடைக்காரர் தேடினார் என்னை - நான் தேடினேன் பம்பரம் இருக்குமிடத்தை...

அந்த பம்பர கூட்டத்தில்,
எனக்கு பிடித்த வண்ணத்தில் - பம்பரத்தை பெற்று கொண்டு கடை விட்டு நகர்ந்தேன்...

சாட்டையின் உயர்த்தின் பாதி வரை சுற்றி விட்டு - பம்பரத்தை கீழே விட பம்பரமோ சுழளவில்லை...

மாறாக என் நண்பனே என்னை சுழன்றான் - டேய் டேய் நா ஒரு வாட்டி டா என்று...

சரி ஆனது ஆகட்டும் என - பல முறை படை எடுத்து இறுதியில் சுழன்றது பம்பரம் - அது இன்று வரை சுழல்கிறது என் நினைவில்...

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



துணிக்கடையில் ஆயிரக்கணக்கான புது புடவைகள் - அவை யாவும் அழகில்லை....

ஏனோ அவள் உடுத்திய
கடை சீருடை
தான் - எம்மை கடத்தி செல்கிறது...


#SALES_GIRL...
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



நீளும் இரவையும்
நினைவில் அவளையும்
எண்ணியபடி...

அவள் நினைவை வரவு வைத்து
இந்த இரவை செலவு செய்து கொண்டிருக்கின்றேன்...

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-



அம்மா

அன்னை தந்தை இரண்டுமாய் என் அருகில் நீ இருந்தாய் - உனை விட்டு பிரிந்து நாங்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல...

உன்னை விட்டு செல்லும் என்னத்தில் வெளிநாடு செல்லவில்லை - நீ பெத்த பிள்ளை நான் என்று ஊர் சொல்லவே புறப்பட்டேன்...

எத்தனையோ ஆசைகள் அத்தனையும் பெரிதல்ல - உன் ஒற்றை புன்னகை ஒன்றுதானே என்னுடைய பேராசை...

உன் முகத்தை பார்துதானே என் விடியல் விடியுதம்மா - உன் மடியில் உறங்கும் நாளை என்னி என் இரவும் கழியுதம்மா...

உன் காயம் போக்கும் மருந்தாக
காலம் சொல்லும் பதிலாக - உன்னை காண நான் வருவேன் அதுவரையில் பொருத்திடம்மா...

-



அலைபாயும் மனதிற்கு அத்தனை ஆசைகள்,
நிறைவேறும் என்னத்தில் நித்திரைக்கு சென்றேன்......

அனைத்தும் கனவாய் விடிந்த பின் கலைந்தது,

தொலைத்த ஆசைகளை வின்மீன் வெளிச்சத்தில் தேடுகிறேன்...

கிடைக்காதென தெரிந்தும்....

#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...

-


Fetching பாலாஜி மில்கி Quotes