23 FEB 2023 AT 20:43
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
வாய்க்கு எட்டாத தூண்டில் புழுவால்
வாழ்நாள் நீண்டது மீனுக்கு-
11 MAR 2023 AT 12:52
சாவி இருக்கும் போதும்
சில பூட்டுகள்
திறக்கப்படுவதில்லை!
சாவி கனமா
பூட்டு கனமா
என்ற கேள்விளூடே
கனத்திருப்பது
திறப்பவர் மனது!-
17 FEB 2023 AT 21:51
மரமாக இருந்தபோது
அமர்ந்திருந்த குருவியை
எதிர்பார்த்து
சன்னல்வழி
பார்த்திருந்தன
அந்த கான்கிரீட்
கட்டிடத்திற்குள் இருந்த
மேசையும் நாற்காலியும்-
16 MAR 2023 AT 22:46
கன்னங்களில் முத்தமிடும்
மழலையும்
கால்களில் முத்தமிடும்
அலையையும்
நினைவுகளில் முத்தமிடும்
முதல் காதலையும்-
14 MAR 2023 AT 20:23
உன் அழிச்சாட்டியங்களை
சகித்துக் கொள்ளும் மனதுக்கு
உன் மௌனங்களை
மொழிபெயர்க்கும் அளவு
துணிவில்லை!-