#கவிஞர்_பிரான்சிஸ்_கிருபா_அண்ணனுக்கு
தனிமையை பாரமாய் எண்ணும்
நீயிருக்கும் அந்த தனியிடத்தில்
நானிருக்கும் இடத்தை போல
உருக்குலைய வைக்கும் பார்வைகளில்லை
நிலைகுலைய வைக்கும் சொற்களில்லை
மல்லாக்க கவிழ்த்துப்போட்டு
மார் மீது மிதிக்கும் அவமானங்களில்லை
அக்கறையாய் திரும்பச் சொல்லி
விலாவில் கத்தி சொருகும் கொலைவெறியில்லை...
துரோகத்தில் தொலைந்து போகும்
ஆபத்துக்களில்லை
எதுவானபோதிலும்
நீயும் நானும் இருக்கும் அந்தந்த தனியிடத்தில்
அந்தந்த சாம்ராஜ்யத்தில்
நாம் சக்ரவர்த்திகளே.
-காஞ்சி வழிப்போக்கன்.🙈-
4 SEP 2019 AT 12:54