மின்விசிறி சுழல்கிறது
ஒரு சத்தம் கேட்கிறது
கடிகார நொடிமுட்கள் அசைகிறது
ஒரு சத்தம் கேட்கிறது
இதை கேட்க ஒரு இரவு
தேவைப்படுகிறது என்றேன்
சரி அதற்கென்ன
இப்பொழுது என்றாள்
உதடுகள் உரசும் சத்தமும்
உளரல் சத்தமும் கேட்கவும்
ஒரு இரவு
தேவைப்படுகிறது என்றேன்
(ஓ மேலே கேட்காதே)-
அலாரம் அடித்து
அவள் விழிக்க
நானும் விழித்தேன்
எழ முயற்சித்தவளிடம்
கூறினேன்
விடியல் இரண்டு
பொய்களை சொல்கிறது
ஒன்று
இரவு இன்னும் முடியவில்லை
இரண்டு
பகல் இன்னும் வரவில்லை
எதற்காக
இப்படி ஒரு விளக்கம்
நான் எழுந்திருக்கக் கூடாது
அதுதானே என்றாள்
(ஓ மேலே கேட்காதே)-
என்னிடம் பிடித்த ஒன்றைக்
கூறு என்றாள் அவள்
வியர்வைகள்
உன் உதட்டின் மேல் வரையும்
பனித்துளி மீசை பிடிக்கும் என்றேன்
வெட்கம் அவளை பிடுங்கி
தின்ன துவங்கியது
இப்பொழுது சொன்னது
ஓரளவுக்கு உண்மை
முழு உண்மை இதுபோல்
ஏதேனும் சொன்னால்
நீ காட்டும் வெட்கங்கள்
(ஓ மேலே கேட்காதே!)-
கடற்கரையில்
அவளும் நானும்
அமர்ந்திருந்தோம்
அலையின் சத்தத்தை
கேட்டாயா என்றேன்
கேட்டேன்
நன்றாக இருக்கிறது என்றாள்
அது என்னுடைய ஏக்க பெருமூச்சு என்றேன்
தள்ளி அமர்ந்திருந்தவள்
அருகில் வந்து
தோள் சாயத்தாள்
இப்பொழுது எப்படி
கேட்கிறது என்றாள்
ஆழ்ந்த முத்தத்தின்
பொழுது ஒலிக்கும்
சத்தம் போல் என்றேன்...
(ஓ மேலே கேட்காதே)
-
வீடு கட்டிக்
கொண்டிருக்கிறேன்
என்றாள்
புதுமனை புகுவிழா
எப்பொழுது என்றேன்
நான் கண்டு கட்டிக்
கொண்டிருப்பது
எனது கற்பனையில்
என்றாள்
அப்படி என்றால்
புதுமனை
புகுவிழாவின் போது
முத்தங்களை பரிசாக
தருகிறேன் என்றேன்…
(ஓ மேலே கேட்காதே!)-
முத்த இமேஜி
தரலாமா
என்று கேட்டாள்
தரலாம் தரலாம்
தாராளமாக
அது வந்து சேரும்
இடத்தை பற்றி
பட்டியலிடவா
என்றேன்
(ஓ மேலே கேட்காதே!)-
நேற்று பச்சை
இன்று மஞ்சள்
அப்படி என்றால் நாளை
சிவப்பு நிற உடையா
என்றேன்...
நான் ஒன்றும்
சிக்னல் இல்லை
இதை பின்பற்ற என்றாள்
சரி சரி நீ சிவப்பு
அணியவில்லை என்றாலும்
பரவாயில்லை
ஏதாவது சொல்லி
உன்னை வெட்கப்பட வைத்து
கன்னம் சிவக்க வைத்து
பார்த்துக் கொள்கிறேன்
என்றேன்...!
(ஓ மேலே கேட்காதே)-
"நீ வாங்கித் தந்த
சட்டையை தான்
அணிந்திருக்கிறேன்”
தன்படம் எடுத்து
அனுப்பினேன்
“ம்.ம்.ம்..
அழகாக இருக்கிறது”
அவளிடம் இருந்து பதில்
ஒரே ஒரு வித்தியாசம்
வாங்கித்தந்தபோது
தொட்டு தடவி பார்த்து
மெட்டீரியல் நன்றாக
இருக்கிறது என்றாய்
இப்பொழுதும் அப்படி கூறினால்
நன்றாக இருக்கும் என்றேன்
(ஓ மேலே கேட்காதே)
-