QUOTES ON #எழிலதிகாரம்

#எழிலதிகாரம் quotes

Trending | Latest

உன் சிரிப்பினில் கரைக்கிறாய்
கவலை தீர்ந்திட
உன் "ங்கா"வில் மூழ்கடிக்கிறாய்
இருள் விலகிட
உன் அசைவுகளால் அலங்கரிக்கிறாய்
அழகே அமுதே அறிவே
எங்கள் உயிர்நாடியே நீதானம்மா!

#எழிலதிகாரம்

-



நடப்புகளை சந்திரயான்
படமெடுப்பது போல,
உன் அசைவுகளை நான்
கண்ணுக்குள் படமெடுக்கிறேன்!.

#எழிலதிகாரம்

-



இதயத்தின் துடிப்பின்
மாற்றத்தில் அவளின்
மனதைப் படிக்கிறேன்.,
இது சத்தியமாய் காதலில்லை
தாய்மையெனும் பெரு வரத்தால்!

-



என் தாய் எனக்காகப் பாடிய
தாலாட்டை நினைவடுக்கில்
தேடிப்பார்த்து ஓய்ந்தேன்,
என் மகள் என்னோடு பாடத்
துடிக்கும் "ஊஉஆஆங்கஆ" வுடன்
ஒப்பிட்டு மகிழ்ந்திடுவதற்கு!

#எழிலதிகாரம்

-



எனக்குப் போட்டியாய்
என்னவனின் தோளில்
இடம்பிடித்த என் குறுநகலைக்
காணும் நேரமெல்லாம் என்
இதயம் நிறைந்த பெருமை
இரு விழிகளில் வழிகிறது!

#எழிலதிகாரம்

-



பனிரோஜாக் குவியலாய்
கைவந்த பொக்கிஷமே..
கனவிலிருந்து நனவாய்
கருவில் வளர்ந்த உயிரே..
நீ முகம் பார்த்து சிரிக்கையில்
என்னை மறக்கிறேன்..
உன் புரியாத மொழி பேச்சில்
உலகையே மறக்கிறேன்!

#எழிலதிகாரம்

-



அழகுப் பூங்கொத்து ஒன்றைச்
சுகமாக சுமந்தேன் நான்..
அப்பூக்குவியல்
வளரப்போகும்
என் இனிய நாட்களை
அன்று கருவிலும்
இன்று கண்ணிலும்
நிறைத்துக் கொண்டு.!.

# எழிலதிகாரம்

-



என்னில் கருவானாயென
நான் மகிழ்ந்திருக்கையில்
வயிற்றில் வளர்ந்திருந்தாய்
கருவாய் உருவாகிறாயென
நான் பூரித்திருக்கையில்
தேவதையாய் அவதரித்தாய்
கையில் கவிதையாய்
சிரித்துக் கொண்டே
வளர்ந்துவிட்டாயடி கண்ணே!
தரை தொட்டு தவழ்ந்து
நீ விளையாட களித்திருக்கிறேன்..

-



சிரிப்பு மாறாமல் பார்த்துக்
கொள்ளச் சொல்லும்
அழகான தேவதை நீ
தடுப்பூசியால் அழவைத்து
கசக்கும் மருந்தைத்தரும்
அன்பான ராட்சசி நான்!

-



கருவினில் இருந்தது போல்
கைகளில் சுருண்டு கொள்
நீ வளரும் வரை பொத்தி
வைக்கிறேன் கங்காருவாய்!.

#எழிலதிகாரம்

-