காதலாயினும்..
கண்ணீராயினும்..
கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்..
முற்றுப்புள்ளியாய்
முடிவது இல்லை..
மூன்று புள்ளிகளாய்
தொடர்கிறது...-
அர்த்த ஜாமத்தில்
அருகில் நீ இல்லாததால்
ஆறுதல் சொல்ல ஆள் இன்றி
இரவின் ஆழத்தில்
உன் நினைவுகளுடன்
தொலைந்து விடுகிறேன்
இமை தொலைத்த
உறக்கத்தினால்
விடியும் வரை...
-
ம்ம்ம் என்று நீ
சொல்லும் போதெல்லாம்
பாரமாய் தோன்றுமடி..
இன்றோ...
ம் என்று ஒரு முறையாவது
சொல்வாயா என்று
ஏங்குதடி..
என் நெஞ்சம்...-
எல்லாம் சரியாகத்தான்
இருந்தது..
நம் இருவரிடையே
இன்னொருவர்
வராமல் இருந்த போது...-
தினமும் உனக்காக
நான் காத்திருக்கும்
மரத்தடியில்..
மரத்துபோய் நிற்கும்
எந்தன் கால்களிடம்..
நீ வர மாட்டாய்
என்று சொன்ன பின்னும்
வர தயங்குதடி
என்னோடு...-
காத்துக்கொண்டு
இருக்கிறேன் கண்ணம்மா
தற்செயலாக உந்தன்
கைப்பட்டாவது
ஒரு குறுஞ்செய்தி
என் உயிர் காக்க
வருமா என்று...
-
அருகில் நீ
இல்லாதபோதும்
நின் நினைவுகளை
காதலிப்பேனே தவிர
நிமிடம்கூட உன்னை
நினைக்காமல்
கடப்பதில்லை
என் உயிரே...-
போகி என்று
மொத்தமாய் போட்டு
எரித்துவிட்டாயடி(டா)...
நம் காதலும்
பழையதாய்
தோன்றியதோ உனக்கு...-
என்னவளே உன்னை
காண வேண்டும் என
ஏங்கி தவிக்கும்
என் மனதிற்கு..
ஏராளமான புகைபடமதை
காட்சியாய் காட்டினாலும்..
கண்ணெதிரே காணும்
அந்த ஒருநொடிதான்
ஆகச்சிறந்த ஆறுதலடி...-