ஏன் இவ்வாறு பிறக்கவில்லை...
👇👇👇-
30 NOV 2018 AT 10:57
அடியில் இருக்கும் என்னை விட்டு
ஆகாயத்தில் இருக்கும்
ஆதவனை நோக்கும் அல்லியே..
நீரான என் நெஞ்சத்தில்
நீ இருப்பதை அறியாயோ?
இலைகளை மீறி என்னால்
உன்னை உரசிட முடியவில்லை
என் ஒரு துளி அன்பை தெளித்தாலும்
கதிரவன் வந்து அழிக்கிறதே
தோள்களில் சுமந்து கொண்டு
நான் இருக்க..
தோணவில்லையா உனக்கு
என்னை காதலிக்க..
இலைகளின் கீழ் என் காதல்
இருப்பதை நீ அறியாயோ?
ஒருமுறையேனும்
தலைகுனிந்து என்னை பாரடி
தண்ணீராகிய என் இதயத்தில்
தலைவியாய் இருக்கும்
உன்னை பிரதிபலிப்பேன்....-