QUOTES ON #உன்_அன்பன்

#உன்_அன்பன் quotes

Trending | Latest
1 FEB 2019 AT 21:59

அந்த உணர்வுக்கு பெயர்தான் என்ன?
அகம் உணர்வது - நான்,
அவளை நினைக்கையில்.

சகோதரம் என்றான் சகோதரன்
சகோதரம் என்று அதை
சகித்துக் கொள்ள முடியவில்லை.

நட்பு என்றால் தோழி
நட்பு என்று அதை நினைத்து
நடிக்கவும் விருப்பமில்லை.

காதல் என்றான் நண்பன்
காதல் என்று அதைக்
காண, காதல் அனுமதிக்கவில்லை.

காமம் என்றது ஒரு மனம்
கண்ணீர் கொண்டு அதை
கடிந்தது மறு மனம்.

நெடுநாள் நீடிக்கும் இவ்வுறவின்
நெருக்கத்தை என் வாழ்வில் நிகழாத
யாருக்காக உணர்கிறேன்.
யார் அவள்?
அந்த உணர்வுக்கு பெயர்தான் என்ன?

-



ஜீவிதம் புளரி ஞாலத்திங்கள்
மேற்கில் வீழ்ந்து ஞாயிறு
பிறப்பது பிரமிப்பு ஆனால்
தேடல் பிரமிப்பு ஆனால்
மேற்கண்டது சாமனியனுக்கு
இயல்பு...! நீவீர் சாமானியனோ..?

-


27 FEB 2019 AT 12:29

அவள் விரும்ப, அவன் கவித்த பொய்கள்,
அவன் குரும்பில், அவள் ரசித்த பொய்கள்,
அதன் விளிம்பில், அவள் வெறுத்த பொய்கள்,
அந்த வெறுப்பில், ஐயம் விதைத்த பொய்கள்,
அதன் வளர்ப்பில், மெய் சிதைத்த பொய்கள்,

மெய் சிதைப்பில், வேர்கொண்டது பொய் விருட்சம்.
அதன் நிழலில் புதைந்து போனதை எண்ணி
அழதான் முடிந்தது அவளால்!

-


21 FEB 2019 AT 19:33

எழுத்துப் பிழைகளுக்கு
இடையில் ஒளிந்த
எண்ணப் பிழைகள்
விழிகளில் வெளிப்பட
தொடங்கும்.

-


6 JAN 2018 AT 1:21

இரு மீன்கள் தண்ணீர் மறந்து
காற்றில் கண்ணுருவெடுத்ததோ!

வெறும் சதையென செண்ணீர் சூழ்ந்த
அவன் இதயத்தில் உருவமற்ற ஒரு உணர்வை விதைத்ததோ!

காற்றில் குடியேறிய பெண்ணின் உருவம்
அவன் நினைவுகளில் உறுபெருத்ததோ!

தனக்கென இசையும்
அக்கண்ணோ மீனோ
என ஆசையில்
மனம் துடிதுடித்ததோ!

அவள் தன்னவள் என்றெண்ணிய வாழ்க்கை
தனக்கு இல்லை என்றதால் மனம் பதை பதைத்ததோ!.

சொரிய மறுத்த கண்ணீர் துளிகள்
எழுத்துருவில் கவிதை சொரிய நினைத்ததோ!

எழுத்தோ கவிதை என்றெண்ணி மனதில்
நிறைந்த அவளையே கதை கதைத்ததோ!

-


24 AUG 2019 AT 19:04

உடை களைந்து வா - என்
உடல் சூட்டில் உன் சிவந்த
உடல் கலக்க வா!

பொன் அலங்காரம் ஏன்?
உன்னையே பொன்னாக்குவேன்
இடையில் யார் வந்தாலும்
புண்ணாக்குவேன்!

- “சூடான எண்ணெய்
வெங்காயத்திடம் 🌰

-


4 MAR 2019 AT 0:56

விடை காணாத வினாக்களைக் கண்டு
விடைபெற்றது மனதின் அமைதி.

-


1 MAR 2019 AT 22:00

தேர்வு அறையில் அவனை
கடிகார முள் துரத்த!
தேர்வு முடிவில் அவன் கண்கள்
கடிகார முள்ளை துரத்த!

என்றிருந்தவன் இன்று,

தேவதையின் தரிசனம் காண
தேனீர் கடையின் கடிகார முள்ளை
துரத்திக் கொண்டிருக்கிறான்!

-


14 FEB 2019 AT 9:24

அவள்: இன்று காதலர் தினம்
அவன்: அதுக்கென்ன?
அவள்: ம்ம்ம்? நாம் காதலர்கள்
அவன்: ஆமா
அவள்: அவ்வளவு தானா?
அவன்: அவ்வளவு தான். வேற என்ன?
அவள்: ☹️

அவன், “அப்படி(☹️) இல்ல இப்படி(😊),
அதுக்கு தான் நான் இருக்கேன்,
எப்பவும் உன் கூட”ன்னு
அவளோட உதட்ட சரி பன்னி ஒரு
முத்து முத்திட்டான்.

-


11 FEB 2019 AT 22:09

என கவி சொல்ல
சிந்தித்தேன்,
சிரித்துக் கொண்டே
“உன் நினைவோடு
நானிருந்தால்” என
மறைத்த கண்ணீர்த் துளிகள்,
அழகிய பொய்களின் நடுவே
உண்மைக் கவியாக
உருவெடுக்கக் கண்டேன்!

-