நீ என்னோடு
பேசிக்கொண்டே
இருக்கணும் என்ற
காரணத்திற்காகவே
அடிக்கடி உன்னிடத்தில்
கோபத்தில்
பிடிவாதமாய் சண்டை
போட்டு விடுகிறேன்
அதுவே உன் மனதை
பாதிக்கிறது என்றால்
நினைத்துக்கொள்
நம் பந்தம்
சிறிது சிறிதாய்
பிரிவிற்கு வழி
வகுக்கிறது என்று……😔😔😭😭
#அனுகவி-
விடியலில்
மறைந்து
போகும்
பனி
துளிகள்தான்
அடிக்கடி
உன் மீது
நான் காட்டும்
செல்ல
கோபம்
புரிந்து
கொள்வாயா???
#அனுகவி-
புரியாத புதிராகவே
புதைந்து கிடைக்கிறது
மெதுவாக நீ பதம்பார்த்து
பொழிந்திட்ட பாசங்கள்
உரமிட்டு உயிர் தந்தாய்
உன் சுவாசக்காற்றில்
உணர்விழந்து நடக்கிறேன்
தெறிபட்டு மதிகெட்டு மிதிபட்டு
கருவிலே கலைத்திருந்தால்
கலையாகி கிளையாகி சருகாகி
கண்ணீரில் கடந்திருக்காது
கடன் பட்டு நீ தந்த
என் நிழல் உருவம்......
#அனுகவி
#121-
கசக்கி எறிந்து
விட்டு செல்வதற்கு
என் காதல் ஒன்றும்
கை துடைத்தெறியும்
காகிதம் அல்ல………
காலம் தீட்டி
கொண்டிருக்கும்
வலிகளின் சுவடுகள்………
#அனுகவி-